
ஒரு காலத்தில் ஆந்திர திரை உலகத்தில் ஓகோ என பட்டம் விட்டவர் கிருஷ்ண வம்சி.தொட்ட படமெல்லாம் விட்டம் தெறிக்க ஓடி விழா எடுத்தது.
இவரைத்தான் படையப்பா நீலாம்பரி ரம்யாகிருஷ்ணன் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக் கொண்டார்.
யாருடைய கண் பட்டதோ,வம்சிக்கு தொடர் தோல்வி குடைச்சல் கொடுக்க வீட்டோடு அமர்வு.
விட்ட இடத்தைப் பிடிக்க வேண்டுமே என்கிற வெறி.!
நட்சமரத் என்கிற மராத்தி படத்தை ரீமேக் பண்ண முடிவு செய்தார்.பிரகாஷ்ராஜ் நடிப்பதாக முடிவு செய்தார். ஆனால் என்ன பிரச்னையோ காரியம் நடக்கவில்லை.
கணவனுக்கு உதவி செய்யவில்லை என்றால் நாமென்ன தர்ம பத்தினி என நினைத்த ரம்யாகிருஷ்ணன் ஓடோடி உதவி கேட்டார் அமலாவின் காதல் மணாளன் நாகார்ஜுனாவிடம்.!
பெண் மனது வைத்து விட்டால் நடக்காமல் இருக்குமா? விரைவில் படப்பிடிப்பு.!












