கல்லூரி’, ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘பரதேசி’, ‘ஜோக்கர்’ உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய.பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான இரா. செழியன் (வயது 50 )உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் .இயக்குனர் பாலாவின் ‘பரதேசி’ படத்துக்காக 2013-ஆம் ஆண்டு லண்டன் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதைப் பெற்றார். அவர் இயக்கிய ‘டூ லெட்’ திரைப்படம் மத்திய அரசின் தேசிய திரைப்பட விருதை வென்றது. மேலும், திரைப்பட ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்ற ‘உலக சினிமா’ என்ற நூலையும் எழுதியுள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்












