
பொங்கலுக்கு வந்த புதுப்படங்களை வெச்சு தமிழ் ராக்கர்சும் பொங்கலை கொண்டாடிட்டாங்க. !
கோடிகளில் கொட்டி படம் எடுக்கிறவன் ஒருத்தன் அதை நோகாம தட்டிக்கிட்டு போறவன் இன்னொருத்தன்கிற மாதிரி தமிழ்ச்சினிமா ஆகிப் போச்சு.
நீ உலக கோர்ட்டுக்கே போனாலும் மவனே ,நான் ரிலீஸ் பண்றத உன்னால் தடுக்க முடியாதுய்யா என்று வலைத்தளங்களில் எறக்கி விடுறானுங்க ராக்கர்ஸ்!
அதை அரசாங்க பஸ்களிலேயே ரிலீஸ் பண்றாங்கய்யா அரசு அதிகாரிகளும்! எங்கே போய் புகார் பண்ணுவீங்க.?
இதுக்குத்தான் ஒரு எஸ்.வி.சேகர் வேணும்கிறது.! பி.ஜே.பி.பிரெய்ன்! செம ஐடியா கொடுக்கிறார்.
“பேசாம புதுப்படத்தை தமிழ் ராக்கர்சுக்கே வித்துடுங்களேன்!. ஒண்ணும் பண்ண முடியாதுய்யா! விஞ்ஞானம் வளர்ந்திடுச்சி! செல்போன்ல போட்டோ எடுக்கிறாங்க .அதனால எல்லா கேமராக்களையும் ஒழிச்சிடுங்கன்னு சொல்ல முடியுமா? இல்ல கைது பண்ணுவோம்னு உத்திரவு போடா முடியுமா?அதனால் தமிழ் ராக்கர்சுக்கு வித்துடுங்க”
எப்படி நம்ம சேகரின் சித்து ஜில்லாடி ஐடியா!












