
இன்னும் திரைக்கு வராத எல்.கே.ஜி.படத்துக்காக ஒரு மோதல்.! நடிகர் விஷ்ணு விஷாலும் ,ஆர்ஜே பாலாஜியும் மோதிக்கொண்டிருக்கிறார்கள்
“இப்படத்துக்கு உழைத்து வேலை செய்து மெரிட்டில் ஒரு சீட் கிடைத்தால் தான் உண்டு. எங்களுடைய படக்குழுவில் யாரோ தீயணைப்புத் துறையில் பணிபுரிகிறார் என்று கூறி திரையரங்கை மிரட்டி காட்சிகள் எல்லாம் வாங்க முடியாது.
நாங்கள் நல்லபடியாக படித்து பாஸ் பண்ணினால் மட்டுமே சீட் கிடைக்கும். நாங்கள் நல்லபடியாக படித்து பாஸ் பண்ணி படம் எடுத்துள்ளோம். மறுபடியும் மறுபடியும் ட்விட்டரில் பதில் சொல்லி கை வலிக்கிறது. நாங்களே எங்களை விளம்பரப்படுத்திக் கொள்கிறோம். எங்களுக்கு வேறு யாரும் விளம்பரப்படுத்த தேவை இல்லை.போய் ரெஸ்ட் எடுத்துக்குங்க!”என்று எல்.கே.ஜி.படத்தின் ஹீரோ ஆர்.ஜே. பாலாஜி ஒரு வீடியோ விட்டிருந்தார்.
இதுதான் விஷ்ணு விஷாலை சுருக்கென குத்தி விட்டது. காரணம் அவரது தந்தை தீயணைப்புத் துறையில் பணியாற்றியவர்.
உடனே பதிலடி.!
‘உங்கள் அனைவருக்கும் எதிர்வினை என்னவென்பதைக் காட்டவே விரும்பினேன். அவ்வளவே. இப்போதும் எல்லாம் ஆதாரப்பூர்வமாக விளங்கியிருக்கின்றன. வெகு நாட்களாகவே உண்மையின் பக்கத்தைக் காண்பிக்க விரும்பினேன்.
உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா?
நான் அநாவசியமாக பேச மாட்டேன் என்பது என்னை அறிந்த எனது ட்விட்டர் நண்பர்களுக்குப் புரியும்.
சிறிய, நடுத்தர பட்ஜெட் படங்களுக்கும் காலை 5 மணி ஷோக்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது சினிமாவுக்கு நல்ல விஷயம். ஆனால் விமர்சனம் என்ற பெயரில் மக்களை திசை திருப்புவது எனக்கு வருத்தமளிக்கிறது. அனைவருக்கும் நல் வாழ்த்துகள்.
ஹாஹாஹா ஆரம்பிச்சுட்டான். அனுதாப ஓட்டு வேட்டையை… எனது தந்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக தீயணைப்புப் படையில் இருக்கிறார். வர்தா புயலின்போதும் அவர் இருந்தார். அவர்கள் எப்படி உயிர்களைக் காப்பாற்றினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். நீங்கள் என்ன உதவி செய்தீர்கள் என்பதும் தெரியும். நீங்கள் உள்ளார என்ன வேலைகள் செய்தீர்கள் என்பதும் தெரியும்?மெரினா புரட்சியின்போது என்ன செய்தீர்கள் என்பதும் தெரியும்?” என்று பதிவிட்டிருக்கிறார்.
சொன்னாத்தானே தெரியும்.அதையும் சொல்லிடுங்க விஷ்ணு விஷால்!












