Sunday, May 31, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

‘பெத்தி’ திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்! – ராம் சரண் பேச்சு!

admin by admin
May 31, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட கிராமத்து விளையாட்டு திரைப்படமான ‘பெத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’, ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கிராமத்து விளையாட்டு பின்னணியுடன் ஆக்ஷன், உணர்வுகள் மற்றும் வெற்றிக்கான போராட்டத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பான்-இந்தியா அளவில் உருவாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தலைமையிலான படக்குழு நாடு முழுவதும் தீவிரமான புரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற சந்திப்பில், படக்குழுவினர் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்கள் பகிர்ந்து கொண்டனர்.

You might also like

நடன அமைப்பாளர் ஷெரீஃப், 250 பாடல்களை கடந்து சாதனை!

விக்ராந்த் ,ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் “அண்டர் 18” !

ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!

நடிகர் ராம் சரண் பேசியதாவது..,

‘’பெத்தி திரைப்படத்தை முடிக்க எங்களுக்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆனது. அதில் 285 நாட்களுக்கும் மேலாக நாங்கள் உழைத்தோம். ஆனால் எங்களைவிட அதிகமாக உழைத்தவர் இயக்குநர் புச்சி பாபு. கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக அவர் இந்தப் படத்திற்காக உழைத்திருக்கிறார்.

நாங்கள் கஷ்டப்பட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் இப்படிப்பட்ட சிறந்த கலைஞர்கள் ஒரு படத்தில் இருக்கும்போது அந்தப் பயணம் கஷ்டமாகத் தோன்றாது. இந்தக் கதையை எங்களிடம் கொண்டு வந்த சுகுமார் சாருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் இந்தப் படத்தின் மையத் தூண். நாங்கள் அனைவரும் ஒரு வீட்டைத் தாங்கும் தூண்கள் என்றால், அதன் நடுவில் இருக்கும் மிகப்பெரிய ஆதாரத் தூண் அவர் தான். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக அதிகாலை வரை விழித்திருந்து பின்னணி இசைப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அவரது அர்ப்பணிப்பு எங்களுக்கு எல்லாம் மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறது.

சிவராஜ்குமார் சார் திரையில் தோன்றினாலே ஒரு தீப்பொறி போல ஆற்றல் உருவாகும். ஜெயிலர் படத்தில் அவருடைய கதாபாத்திரத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். காரில் பயணம் செய்யும்போதுகூட அந்த காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்ப்பேன். குறிப்பாக அவர் மெதுவாக நடந்து வரும் காட்சியும், பீடி பிடிக்கும் அந்த ஸ்டைலும் இன்று ஒரு ஐகானிக் தருணமாக மாறியுள்ளது. அவரது கண்களே ஆயிரம் வார்த்தைகள் பேசும்.
ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு சாருடன் நான் நான்கு திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறேன். இரண்டு படங்களை நான் தயாரித்தபோதும் அவர் உடன் இருந்தார். அவர் ஒரு உண்மையான ஜாம்பவான். எந்திரன் படத்தில் அவர் உருவாக்கிய காட்சிகள், குறிப்பாக பிரம்மாண்ட பாடல் காட்சிகள், என்னை மிகவும் கவர்ந்தவை. ‘அந்த மாதிரியான ஒரு காட்சியை எனக்கும் கொடுங்கள் சார்’ என்று நான் எப்போதும் அவரிடம் கேட்பேன்.
ரஜினி சார், கமல் சார், ஷங்கர் சார் போன்ற மகத்தான கலைஞர்களுடன் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருக்கிறது. ஆனால் அந்த அனுபவத்தின் பெருமையை அவர் ஒருபோதும் வெளிக்காட்ட மாட்டார். அதுவே அவரது சிறப்பு. என்னைப்போலவே திவ்யேந்து இந்தப் படத்தில் மிகப்பெரிய உழைப்பை தந்துள்ளார் அவரது காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

இந்தப் படத்தை நான் வெறும் ஒரு நடிகராக செய்யவில்லை. மனதார காதலித்து செய்தேன். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்ததும், என் நண்பர்களிடமும், அம்மாவிடமும், அந்த நாள் ஷூட்டிங் அனுபவங்களைப் பற்றியே தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பேன். ‘போதும், நிறுத்து… நாள் முழுவதும் இதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாய்’ என்று அவர்கள் சொல்லும் அளவுக்கு பெத்தி படம் என் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.

என் வீட்டில் எப்போதும் ஒரு விஷயம் சொல்வார்கள். ‘ஒரு படத்தைப் பற்றி நீ வீட்டிற்கு வந்த பிறகும் தொடர்ந்து பேசினால், அந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும்’ என்று. ஆர்.ஆர்.ஆர்., ரங்கஸ்தலம், மகதீரா போன்ற படங்களைப் பற்றியும் நான் அப்படித்தான் பேசினேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பெத்தி படத்தைப் பற்றியே வீட்டில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். அதுவே இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்பதற்கான என் நம்பிக்கை. குடும்பத்தோடு, குறிப்பாக குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டிய படம் இது. மிகவும் ஊக்கமளிக்கும், மனதைத் தொடும் திரைப்படமாக இருக்கும்.

என் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் ஒரு படத்தை இயக்குநர் புச்சி பாபுவும், சுகுமார் சாரும் எனக்கு கொடுத்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இறுதியாக, முதல்வர் விஜய் அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உச்சநிலையிலிருந்த ஒரு திரைப்பட வாழ்க்கையையும், மிகப் பெரிய நட்சத்திர அந்தஸ்தையும் விட்டு விட்டு பொதுச் சேவைக்காக வந்திருப்பது பாராட்டத்தக்க விஷயம். திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒருவராக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவருக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் என் வாழ்த்துகள். என்றார்.

 

admin

admin

Related Posts

நடன அமைப்பாளர் ஷெரீஃப், 250 பாடல்களை கடந்து சாதனை!
News

நடன அமைப்பாளர் ஷெரீஃப், 250 பாடல்களை கடந்து சாதனை!

by admin
May 31, 2026
விக்ராந்த் ,ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்  “அண்டர் 18” !
News

விக்ராந்த் ,ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் “அண்டர் 18” !

by admin
May 30, 2026
ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!
News

ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!

by admin
May 30, 2026
அஜித் தாயார் மரணம்: முதல்வர்  விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் திரையுலகினர் இரங்கல்!
News

அஜித் தாயார் மரணம்: முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் திரையுலகினர் இரங்கல்!

by admin
May 30, 2026
“எல்லோரையும் நம்பாதே” – ரவி மோகன் அறிவுரை!
News

“எல்லோரையும் நம்பாதே” – ரவி மோகன் அறிவுரை!

by admin
May 30, 2026

Recent News

நடன அமைப்பாளர் ஷெரீஃப், 250 பாடல்களை கடந்து சாதனை!

நடன அமைப்பாளர் ஷெரீஃப், 250 பாடல்களை கடந்து சாதனை!

May 31, 2026
விக்ராந்த் ,ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்  “அண்டர் 18” !

விக்ராந்த் ,ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் “அண்டர் 18” !

May 30, 2026
ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!

ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!

May 30, 2026
அஜித் தாயார் மரணம்: முதல்வர்  விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் திரையுலகினர் இரங்கல்!

அஜித் தாயார் மரணம்: முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் திரையுலகினர் இரங்கல்!

May 30, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?