
தப்பான தொழில் செய்தாலும் ராசி வேணும்னு கிராமத்து பாட்டிகள் சொல்வாங்க.செய்ற தப்பை சரியாய் செய்யணும்.இல்லையா மாட்டிக்காம தப்பிக்க வழி இருக்கான்னு தேடனும் இரண்டும் இல்லாம செய்தால் நாலு பேர் சிரிக்கத்தான் செய்வாங்க.
இது பொதுவான உலக வழக்கம்.
ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வியின் படத்தை அட்டையில் ,போட்டால் தனி அழகுதான்.! ரொம்பவும் கவனமாக எச்சரிக்கையாக போட்டோ ஷாப் பண்ணி ,திருத்தங்கள் செய்து பிரசுரம் செய்வாங்க.
பிரபலமான பட்டோடி குடும்பத்து நடிகை சாரா அலிகான். பெரிய இடம்.
சயீப் அலிகான் அம்ரிதா சிங் மகள்.
கேதார்நாத்,சிம்பா ஆகிய இரண்டு படங்களில் பிசியாக இருப்பவர். இவரது படத்தை போட்டோ ஷாப் பண்ணி பிரபல ஆங்கில சினிமா பத்திரிக்கை பிலிம் பேர் போட்டிருக்கிறது.
சாராவுடன் ஒரு ஆப்பரிக்க மனிதன் நிற்பது மாதிரி !
அதில் வேடிக்கை என்னவெனில் சாராவின் நிழல் நிலத்தில் விழுந்திருக்கிறது.ஆனால் ஆப்பிரிக்கரின் நிழல்?
இல்லிங்க.அவர் கால்கள் பூமியில் பதிந்தது மாதிரி இல்லை என்பதால் போட்டோ ஷாப்பில் கவனிக்காமல் விட்டு விட்டார்களோ!
நிழல் எங்கே,நீயும் எங்கே?












