
ஜெயபிரதாவை பிரபல நடிகை என்று சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா மாட்டீர்களா?
தமிழில் பிரபலம். வடநாட்டில் அரசியல் பிரவேசம்,கட்சி தொடக்கம்,நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறார்.
ஆக அவரது கருத்துகளுக்கு நாட்டில் மரியாதை இருக்கிறது!
அவர் சொல்கிறார்:
“பல நூற்றாண்டுகளாக இந்த சமுதாயம் பெண்களை மட்டுமே நல்ல மனைவிகளாக உருவாக்கி வந்திருக்கிறது. ஆனால் ஆண்களை நல்ல கணவன்களாக உருவாக்கவில்லை.”என்று சமுதாயத்தின் மீது குற்றம் சாட்டி இருக்கிறார்.
இது ஒரு வகையில் உண்மைதான்.!
இதோ ஒரு நடிகை சிகரெட் புகைப்பதை நிறுத்தி விட்டாராம். அந்த நடிகையின் பெயர் பாயல் .












