
சொந்தக் காசில் ஆப்பம் சாப்பிடுவதை விட அடுத்தவன் காசில் சாப்பிட்டால் மேலும் கூடுதலாக ரெண்டு ஆப்பத்தை உள்ளே அனுப்பலாம்.
அதே கதைதான் அமலாபாலுக்கு.!
ஏஎல்.விஜய்யை விவாகரத்து செய்த கையோடு சொந்த ஊரான கேரளத்துக்கு சென்று விட்டார். அங்கு வகை வகையாக போட்டோக்களை எடுத்து தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டு விழா கொண்டாடி வருகிறார்.
சும்மாதானே இருக்கிறார் ,ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்கலாம் என தயாரிப்பாளர் சென்றால் ….
சென்னையில் ஸ்டார் ஓட்டலில் ஒரு வார தங்கலுக்கான வாடகை,இதர பல செலவுகள், சொகுசுக்கார் என மொத்தமாக கறந்து விடுகிறாராம்.
அலறுகிறார்கள்.!












