
இவ்வளவு சீக்கிரமாக நடவடிக்கை எடுப்பார்கள் என் யாருமே எதிர்பார்க்கவில்லை.
மொத்த சினிமா உலகமும் பொங்கியதால் வந்த வினை என சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்,.அது உண்மைதான் .ஆனால் அப்படி பொங்கியதற்கு யார் காரணம்?
விக்னேஷ்சிவன்,!
நயன்தாராவுடன் இணைந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்.
எப்படி தாங்கிக் கொள்வார்.?
ஈருடல் ஓருயிராக வாழ்ந்து கொண்டிருக்கிற அவர் தனது இணையை மோசமாக ஒருவர் தாக்குவதை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?
“மதிப்பிற்குரிய மு.க.ஸ்டாலின்,கனிமொழி ஆகிய தலைவர்களே!
“பொள்ளாச்சி காமக்கொடூரன்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என குரல் கொடுத்துவருகிற நீங்கள் ஆண் ஆதிக்கவாதியும்,ஆபாசத்தனமான,அடாவடிப் பேர்வழியுமான ராதாரவி மீது நடவடிக்கை எடுக்கமாட்டீர்களா?”
இந்த பதிவுதான் திமுக தலைமையை நடவடிக்கை எடுக்க வைத்திருக்கிறது.
நயன்தாராவுக்காக எல்லா நடிகர்களுமே பொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.












