
காமடியாக பெண்களை இழிவுபடுத்துகிற பேச்சுகளுக்கு கை தட்டி சிரித்து பொங்குகிற பார்வையாளர்களுக்கு நடிகை நயன்தாரா புத்திமதி சொல்லி இருந்தார்.அத்தகைய பேச்சுகளுக்கு ஆதரவு தராதீர்கள் என கேட்டிருந்தார்.
அதற்கு மக்கள் நீதி மய்யப் பிரமுகர் ஸ்ரீ பிரியா ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
“பேச்சாளார்களுக்கு உள்ள கடமை பார்வையாளருக்கும் இருக்கவேண்டும்…தவறானகருத்துக்கு கை தட்டி ஆதரவு கொடுப்பது நிறுத்தப்படவேண்டும்…இதனால் வாய் துடுக்கான விமர்சனங்கள் தவிர்க்கப்படும்!”என பதிவு செய்திருக்கிறார்.












