
தினமும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு பலியாகி எமனுக்கு இரையாகும் கொடுமை இன்பத் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது.
சட்டசபை துணை சபாநாயகரின் பிள்ளைகள் துணையுடன் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள். என்கிற செய்தி நம்மை கழுவேற்றிக் கொண்டிருக்கிறது. ஏழாண்டுகளாக நடந்து வந்ததை போலீஸ் அதிகாரிகள் பார்த்தும் பாராமுகமாக இருந்திருக்கிறார்கள்.
இந்த எழவு செய்தியும் எடப்பாடி ஆட்சியில் இன்றுதான் வந்தது.
கோவை மிகப்பெரிய தொழில் நகரம். குபேரர்கள் இங்குதான் இருக்கிறார்கள்.
இந்த நகரத்தில் ஆறு வயது சிறுமி வன்புணர்வு செய்யப் பட்டிருக்கிறாள்.
மலம் தின்னும் பன்றியிலும் இழிவானவர்கள் இவர்கள்தான்.!
வன்புணர்வு +படுகொலை இரண்டையும் செய்து விட்டு ஓடிப்போனான்.
“நாங்கள் பத்து பிரிவு போலீஸ் படை அமைத்து தேடிவருகிறோம் “என்கிறது காவல்துறை.
துடித்துகொண்டு வருகிறது விக்னேஷ் சிவனின் பதிவு.!












