
ஒரு காலத்தில் சினிமா விழாக்களுக்கு வரவே மாட்டார் நடிகை ஜெய். நடிகை அஞ்சலியுடனான நட்பு புட்டுக்கொண்ட பிறகு ஏற்பட்ட ஞானோதயமோ என்னவோ தற்போதுதான் சில விழாக்களில் அவரின் தலையைப் பார்க்க முடிகிறது.
இது தொடரும் என்று நம்புவோமாக.!
கோபி நைனாரின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிற ஜெய் அடுத்து நடிக்கவிருப்பது எஸ்.ஏ .சந்திரசேகரின் இயக்கத்தில்.! இது அவருக்கு ஒரு சோதனை மாதிரி.!
கடுமையான அரசியல் வசனங்களை பேச வேண்டியது வரும். பேசுவாரா? இதுவரை அவர் காமடியாகவும்,காதலராகவும் நடித்து வந்த அவருக்கு இந்தப் படம் சோதனையாகத் தான் இருக்கும்.












