
காயத்ரி ரகுராம் என்றால் ஞாபகம் வருதா?
இல்லியா?
அட ..குடிபோதையில் கார் ஓட்டியதாக மாட்டிக்கொண்டு பைன் கட்டினாரே அந்த பிக் பாஸ் ஆன்ட்டி தாங்க.!
அவங்களும் ஒரு சவுக்கிதார்தான்! எல்லாம் தேர்தல் வரைதான்!
அமேதி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி தன்னை பட்டதாரி இல்லை என்பதாக உண்மையை சொன்னது ஒரு பிரச்னையாகி நிற்கிறது. கடந்த தேர்தலில் பிகாம் முடித்தது போல காட்டி இருந்தார்.இந்த முறை பி.காம் பார்ட் 1 என்று குறிப்பிட்டிருக்கிறார். இதுதான் தற்போதைய சிக்கல்.!
ஸ்மிருதிக்கு சப்போர்ட் பண்ணுவதாக நினைத்து கமல்,குஷ்பு இருவரையும் காயத்ரி வம்புக்கு இழுத்திருக்கிறார்.
“அக்கா குஷ்பு,அங்கிள் கமல் இருவரும் டிகிரி முடிச்சிட்டாங்களா?கடமையும் அர்ப்பணிப்பும்தான் முக்கியம்.ஸ்மிருதிஜியின் சேவை அமேதிக்கு தேவை. ராகுல் காந்தி செய்யாததை ஜி செய்வார்” என சொல்ல ,குஷ்பு பதிலுக்கு செம அடி கொடுத்திருக்கிறார்.
“காயு….நானும் கமலும் ஒருபோதும் பட்டதாரிகள் என்று சொல்லிக்கொண்டதில்லையே!எங்களுடைய ஆரம்பகால போராட்டங்கள் பற்றி சொல்லிக்கொள்ள தயங்கியதில்லை.பொய்யான தகவல் ஒருபோதும் கொடுத்தது இல்லை.பொய்யாக பேப்பர் தயாரித்தது இல்லை”என்று சொல்லி இருக்கிறார்.












