அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ‘கைலி ஜென்னர்’, இவர் மாடல் மற்றும் சமூக ஊடகப் பிரபலம் ஆவார். இவர் கர்தாஷியன்–ஜென்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது குடும்பம் கீப்பிங் அப் வித் கர்த் ஸியன்ஸ் என்ற ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானது. இவருடைய அக்கா கிம் கரதஸியனும் உலகப் புகழ்பெற்றவர்.இந்நிலையில்,கைலி ஜென்னர் பிரமிப்பூட்டும் வகையில்,50 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு கண்ணைக் கவரும் ஃபேன்டஸி உள்ளாடையை அணிந்து, விக்டோரியாஸ் சீக்ரெட் ரன்வேயில் அறிமுகமானதன் மூலம், தனது ஃபேஷன் பயணத்தில் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளார். உலக நாடுகளை பிரமிக்க வைப்பதெல்லாம் இந்த உள்ளாடையின் வேலைப்பாடுகள் தான். சுமார் 4410 வைரங்களை பயன்படுத்தி, 1000 மணி நேரம்… அதாவது 41 நாட்கள் 16 மணி நேரத்தை எடுத்துக்கொண்டு இந்த “உள்ளாடையை” நுணுக்கமாக வடிவமைத்துள்ளனர். கைலி ஜென்னர், குட்டைப் பாவாடையுடன், ஒளிபுகும் ஹீல்ஸ் மற்றும் வெள்ளை இறகுகள் கொண்ட உடைகளை அணிந்து நடந்து அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்தார். இந்த ஃபேன்டஸி உள்ளாடையின் மதிப்பு பிரமிக்க வைக்கும் வகையில் 50 மில்லியன் டாலர் ஆகும், இந்திய மதிப்பில் கணக்கிட்டால் சுமார் ரூ.474.65 கோடி ரூபாய் ஆகும். இது அதன் முந்தைய மாடல்களை விட 35 மில்லியன் டாலர் அதிக விலை கொண்டது.ஜேக்கப் நிறுவனத்தின் நகை வடிவமைப்பாளர் ஜேக்கப் அரபோவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த உள்ளாடையில், 75.54 காரட் எடையுள்ள பிரகாசமான மஞ்சள் நிற வைரத்தைச் சுற்றி, 4410 இயற்கை வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த உள்ளாடையின் எடை 1.8 கிலோவிற்கு சற்று குறைவாக உள்ளது. இந்த சிக்கலான வடிவமைப்பை உருவாக்குவதற்கு 15 திறமையான கைவினை கலைஞர்கள் தங்களது முழு வேலைபாட்டை இதில் ஈடுபடுத்தியுள்ளனர்.
இந்த பிரமிப்பூட்டும் ஃபேண்டஸி பிராவை உருவாக்கிய அர போ மற்றும் செல்மன் கூறுகையில்,”
“வடிவமைப்பிற்கு உண்மையாக இருக்கும் அதே வேளையில், பிரா அணிவதற்கு வசதியாக இருப்பதை உறுதி செய்வதே மிகப்பெரிய சவாலாக இருந்தது,.நினைவில் கொள்ளுங்கள், இந்த பிரா முழுவதும் தங்கம் மற்றும் வைரங்களால் ஆனது—இதில் துணி எதுவும் இல்லை. எனவே, சரியான பொருத்தத்தைப் பெறுவதும், அது உடலுடன் இயல்பாக அசைவதை உறுதி செய்வதும் எளிதாக இருக்கவில்லை.” எங்களது குழுவினர் ஜென்னரின் துல்லியமான அளவுகளை எடுத்து, அதிலிருந்து, தொடர்ச்சியான சரிசெய்தல்களுடன் அவருக்குப் பொருத்தமான ஒரு மாதிரியை உருவாக்கினர். “துல்லியமான அளவுகள் இருந்தாலும், காகிதத்தில் அழகாகத் தெரிவது எப்போதும் உடலில் அதே போல் செயல்படுவதில்லை,”பிரா அழகாகவும் வசதியாகவும் இருக்க, ஒவ்வொரு வளைவும், ஒவ்வொரு வைரமும், ஒவ்வொரு தங்கத் துணுக்கும் கவனமாகப் பொருத்தப்பட வேண்டியிருந்தது. பரபரப்பான பெயரையும் மலைக்க வைக்கும் விலையையும் ஒருபுறம் வைத்துவிட்டுப் பார்த்தால், இந்த முழு முயற்சிக்குமான உண்மையான நோக்கம் மிகவும் நேரடியானது உண்மையாகவே இது ரசிகர்களுக்காகத்தான்” என்கின்றனர் .”












