
நேர்கொண்ட பார்வை –ஆகஸ்ட் 10 ரிலீஸ்.
அடுத்த படம் யாருக்கு?
“பிங்க் ‘ ரீமேக் பண்ணிய எச்.வினோத்துக்குத்தான் இரண்டாவது படத்தை இயக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.
2020 மே முதல் தேதி அஜித்தின் பிறந்தநாள். அந்த நாளில் படத்தை ரிலீஸ் பண்ணியாக வேண்டும் என்கிற நிபந்தனையுடன் வினோத்திடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள்.
வினோத்திடம் அரசியல் சார்ந்து ஒரு கதை பண்ணுங்கள் என சொல்லியிருக்கிறார் அஜித்குமார்.
அதே கதையை விஜய்யிடமும் சொல்லியிருக்கிறார்.
ஆனால் தற்போது சொன்ன ஒன் லைனர் அஜித்துக்கும் பிடித்து விட்டது தயாரிப்பாளர் போனி கபூருக்கும் பிடித்து விட்டது. அதனால் இந்த கதையை விரிவாக எழுதும்படி சொல்லி விட்டார்கள்.
அந்த கதைதான் அடுத்த மே 1 ம் தேதிக்கு ரிலீஸ் ஆகப்போகிறது. இன்னும் நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கவில்லை.ஸ்கிரிப்ட் வேலை தீவிரமாக நடக்கிறது.












