
சிதம்பரம் தொகுதியில் தொல்.திருமாவின் வெற்றி இருளிலும் ஒளியிலுமாக மாறி மாறி பயணித்துக் கடைசியில் வெற்றிப் பழமாக கையில் கிடைத்தது.
அதைப்பற்றி பா. ரஞ்சித் தனது கருத்துகளை இப்படி பதிவிட்டிருக்கிறார்.
“ஆம் எல்லோரையும் போல் வெற்றி தலித்துகளுக்கு அவ்வளவு சுலபம் இல்லை! அது தனித் தொகுதியாக இருந்தாலும்!!
மகிழ்ச்சி !! இந்த வார்த்தையில் அண்ணன் #திருமா வெற்றியை அளவிடவே முடியாது, அதே போல் வேறு எவர் வெற்றியுடனும்ஒப்பிடமுடியாது ! மிக சுலபமாக அலங்கரிக்கப்பட்ட சின்னத்தில் நின்று வெற்றிபெற்றிருக்க முடியும்! ஆனால் எப்போதும் நமக்கு புறக்கணிக்க முடியாத வெற்றி அவசியமாய் இருக்கிறது! ஜெய் பீம்!!”என பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.












