
இன்று கோலிவுட்டில் இசை அமைப்பாளர்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள்.
“இசைஞானி என்பவர் அப்படியெல்லாம் பேசலாமா?
அப்படி என்ன பேசி விட்டார் என்கிறீர்களா? வருகிற ஜூன் 3 ம் நாளை இளையராஜாவின் பிறந்தநாளாக கொண்டாடுகிறார்கள். இதற்காக சினிமா எக்ஸ்பிரஸ் சார்பில் எடுக்கப்பட்ட நேர்காணலில் ஒரு கேள்வி!
“பழைய படங்களின் பிரபல பாடல்கள் இடம் பெறுகிறது, அதற்கு உதாரணம் ‘96’ படம். இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் “என்று ராஜாவிடம் கேட்கிறார் தொகுப்பாளர்.
அதற்கு பதிலளித்த அவர், “அதெல்லாம் தவறான விஷயங்கள். ஏதோ ஒரு காலகட்டத்தில் நடக்கும் காட்சியில், அந்தக் காலகட்டத்திற்கான பாடலை குறிப்பிட்ட இசையமைப்பாளர் இசையமைத்து பயன்படுத்த வேண்டும். ஆனால் இவர்கள் ஏற்கனவே புகழ்பெற்ற பாடலை பயன்படுத்துகிறார்கள். இது அவர்களின் பலவீனத்தைக் காட்டுகிறது. 80-களில் வெளியானப் பாடல் என்றால் அதற்கு நிகரானப் பாடலை இசையமைத்துப் பயன்படுத்த வேண்டும். ஏன் இசையமைக்க முடியவில்லை. எனது இசையை மக்களிடமிருந்து பிரிக்க முடியவில்லை. ஆகவே எனது பாடலை பயன்படுத்துகிறார்கள். இது ஆண்மையில்லாத் தனம்” என்கிறார்.
இதில் கூட்டவோ குறைக்கவோ இல்லாமல் அந்த இணையத்தில் வந்ததை அப்படியே தந்திருக்கிறோம்!
இந்த சர்ச்சைக்குரிய பேச்சினால் அவரது பிறந்த நாளை இசை அமைப்பாளர்கள் புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
மகிழ்ச்சிகரமான நிகழ்வும் நடந்திருக்கிறது.
வீண் சண்டை போட்டுக்கொண்டு பிரிந்திருந்த ராஜாவும் எஸ்.பி.பாலுவும் மீண்டும் சேர்ந்து விட்டார்கள். நண்பனை கட்டி அனைத்து வரவேற்றிருக்கிறார் ராஜா.












