
- தன்னை மறந்து
மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம்
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா ?
கவியரசர் கண்ணதாசனின் கிறங்க வைக்கும் வரிகள். காதலின் மேன்மையை உணர்த்தும் பாடலை ‘பகலில் ஓர் நிலவு படத்துக்காக எழுதியிருந்தார்.
- கேட்க நினைத்தாள் மறந்தாள்
கேள்வி எழும் முன் விழுந்தாள்
எந்த உடலோ
எந்த உறவோ ?
திரையுலக ‘மார்க்கண்டேயனி’ திரிஷாவிடம் கேட்க துடிக்கிற கேள்வி.!
- உங்களின் காதலர் யார்?
கண்கொத்திப்பாம்பாக கவனித்துக்கொண்டிருந்தாலும் காதல் அதன் பார்வையை மழுங்கடித்து விட்டுபறந்து சென்றுவிடும். கடந்த கால காதல் வாழ்க்கையை யாரும் மறந்து விட முடியாது.
ராணா டகுபதி, வருண் மணியன் என வந்து போனவர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தான் “நான் சிங்கிள் பட் டேக்கன்”என சொல்லியிருக்கிறார்.












