Friday, May 1, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

சூர்யா மீது அவதூறு பேசாதே! கமல்ஹாசன் கண்டனம்.

admin by admin
July 17, 2019
in News
425 5
0
595
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடே கொள்ளை போனாலும் அதில் எனக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும் என்று கேட்கிறவன்தான் இன்றைய அரசியல்வாதி.

You might also like

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ கதாபாத்திர அறிமுக காட்சிகளை வெளியிட்ட விஜய் சேதுபதி!

EXAM இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

ஜூன் 15 க்குள் ‘துருவநட்சத்திரம்’ வெளியீடு! கோர்ட் அதிரடி உத்தரவு !!

நாட்டைப் பற்றியோ,நாட்டு மக்களின் நலன் பற்றியோ ,வருங்காலத்தைப் பற்றியோ ஆட்சியில் இருப்பவர்கள் கவலைப்படுவதில்லை.

காந்தியும் நேருவும் படைத்த கொள்கைகள் இன்று மதவெறியர்களால் புதை குழிக்குப்  போகின்றன. 

கமிஷன்,குடும்ப அரசியல் என மூழ்கிப் போனவர்கள் ஏழைகளின் எதிர்காலம் பற்றி ஏன் கவலைப்படப் போகிறார்கள்?

ஏழைகளைப் பற்றி கவலைப்படுவதாக சொல்கிறவர்கள்  நடத்துகிற பள்ளிகளில் ஏழைப்பிள்ளைகளுக்கு இடம் இல்லை. கோடீஸ்வரர்களுக்குத் தான் அங்கு இடம் உண்டு. 

இத்தகைய நிலையில் தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை பற்றி  அகரம் பவுண்டேஷன் நடத்திய நிகழ்ச்சியில்  நடிகர் சூர்யா பேசினார்.

உண்மையை உரத்துச்சொன்னார்.,

” மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக்கொள்கை மக்களிடம் சென்று இன்னும் முழுமையாக சேரவில்லை,

 மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த கல்விக்கொள்கை வரைவில், 3ஆம் வகுப்பு முதல் நுழைவு தேர்வு, கல்வி தேர்வு என தேர்வுகள் வைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.

சரியான சமமான கல்வி இல்லாமல் எப்படி கல்வி தேர்வுகள் வைக்க முடியும்?

இந்த புதிய கல்விக்கொள்கை என்பது முப்பது கோடி மாணவர்களின் வாழ்க்கை பற்றியது.

ஆரம்பக் கல்வியிலேயே மூன்று மொழிகளை திணிக்கின்றனர்,

இதுபோன்று மொழிகளை திணிப்பதன் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் .

ஏனெனில் அரசு பள்ளிகளில் இதுபோன்ற கல்விகள் மாணவர்களுக்கு கிடைப்பதில்லை.

 60% மாணவர்கள் அரசு பள்ளிகளில் தான் படிக்கிறார்கள், புதிய கல்விக்கொள்கை குறித்து விரிவாக விவாதிக்க வேண்டியது மிகவும் அவசியம்,

அரசு  பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை, 10  ஆண்டுகளாக ஆசிரியர்களே இல்லாமல் படிக்கும் 30% மாணவர்கள் எப்படி நீட் தேர்வு  எழுதுவார்கள்?

எதற்கெடுத்தாலும் நுழைவுத் தேர்வு நடத்தினால் மாணவர்கள் எப்படி படிக்க முடியும், நுழைவுத் தேர்வுகளால் தனியார் பயிற்சி  மையங்கள் அதிகரிக்கும்,

தனியார் பயிற்சிப்பள்ளிகள் நாடு முழுவதும் ரூ.5000 கோடி வருமானம் ஈட்டுகின்றன,

கற்பித்தல் என்ற முறைக்கு பதில் கோச்சிங் சென்டர் முறை வரும் .

அதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் பின் பள்ளி கல்லூரிகளின் தேவைகள் இல்லாமல் போய்விடும்.” என புட்டுப் புட்டு வைத்தார்.

.நடிகர் சூர்யாவின் கருத்துக்கு பா.ஜ கவின்  தமிழிசை மற்றும் எச்.ராஜா   உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

.சூர்யாவின் கருத்துக்கு ஆதரவாக சீமான் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில்,சூர்யாவின் கருத்து சரிதான் என   மக்கள்நீதி மய்ய க்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அறிக்கை விடுத்துள்ளார் .

அந்த அறிக்கையில் கமல்ஹாசன் கூறியுள்ளதாவது,

“ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்து வருகிறார்கள்.

எனவே, கல்வி குறித்து பேசுவதற்கான உரிமை சூர்யாவிற்கு உண்டு.

புதிய கல்விக் கொள்கை குறித்த தம்பி சூர்யாவின் கருத்துக்கள் பலவற்றில்  எனக்கும் உடன்பாடு உண்டு.

மக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு, வெளியிடப்பட்டிருக்கின்ற அறிக்கை மீது கருத்து சொன்னதற்காக, சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்க போக்கினை மக்கள் நீதி மையம் வன்மையாக கண்டிக்கிறது

தம்பி சூர்யாவுக்கு என் ஆதரவு கண்டிப்பாக உண்டு. “என ஆதரவுக் கரம் நீட்டியிருக்கிறார்.

காமராஜரின் கல்விக் கொள்கையத்தான் கொண்டு வந்திருக்கிறார்கள்”என சிலர் சொல்லிவருவது  பெருந்தலைவருக்கு செய்கிற பச்சைத் துரோகம் ஆகும்.!

Tags: அகரம் பவுண்டேஷன்கமல்கல்விக்கொள்கைசூர்யாமக்கள் நீதி மய்யம்
admin

admin

Related Posts

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ கதாபாத்திர அறிமுக காட்சிகளை வெளியிட்ட விஜய் சேதுபதி!
News

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ கதாபாத்திர அறிமுக காட்சிகளை வெளியிட்ட விஜய் சேதுபதி!

by admin
May 1, 2026
EXAM இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா!
News

EXAM இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

by admin
May 1, 2026
ஜூன் 15 க்குள் ‘துருவநட்சத்திரம்’ வெளியீடு! கோர்ட் அதிரடி உத்தரவு !!
News

ஜூன் 15 க்குள் ‘துருவநட்சத்திரம்’ வெளியீடு! கோர்ட் அதிரடி உத்தரவு !!

by admin
April 30, 2026
இயக்குனர் ரத்னகுமார் மீது லோகேஷ் கனகராஜ் வைத்த குருட்டு நம்பிக்கை!
News

இயக்குனர் ரத்னகுமார் மீது லோகேஷ் கனகராஜ் வைத்த குருட்டு நம்பிக்கை!

by admin
April 30, 2026
டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட ‘மூன்றாம் பிறை’;  நாளை முதல் அமேசான் ஓடிடி தளத்தில்!
News

டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட ‘மூன்றாம் பிறை’; நாளை முதல் அமேசான் ஓடிடி தளத்தில்!

by admin
April 30, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?