
பட்டாஸ் தொழிலே ஆபத்தானது. அதை எப்படி கையாளவேண்டுமோ அப்படி பக்குவமாக கையாண்டால் தொழிலும் சிறப்பாக இருக்கும். ஆபத்தில்லாமல் பட்டாஸ் தொழிற்சாலைகளை இயக்க முடியும்.
ஆனால் சினிமா பட்டாஸ் வேற.!
ஆட்டம் பாட்டு,அதிரடி திருப்பம் என பல வகை பட்டாஸ்களை வெடிக்க விடுவார்கள். பட்டாஸ் தலைப்பில் சத்யஜோதி தியாகராஜன் படம் எடுத்திருக்கிறார்.
அவர் என்ன சொல்கிறார்?
தனுஷின் வேடிக்கையான தோற்றத்தையும், ‘பட்டாஸ்’ என்ற தலைப்புக்கு ஏற்ப வண்ணங்களின் சுறுசுறுப்பான ஃப்ளாஷ்களையும் பார்க்கும்போது, இந்த திரைப்படம் தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, நிச்சயமாக அனைத்து தரப்பினருக்கும் ஒரு விருந்தாக மாறும் என்ற மிகுந்த நம்பிக்கையுடன் நாங்கள் இருக்கிறோம்.
ஃபர்ஸ்ட் லுக்கில் அவரது இளமை தோற்றம் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. மேலும், இயக்குனர் துரை செந்தில்குமார் அவரை மிக அழகாக காண்பிப்பதில் தனது சிறந்த அணுகுமுறையை வெளிப்படுத்தி இருக்கிறார்.பட்டாஸ் அந்த கொள்கைக்கு நியாயம் செய்யும் படமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
இந்த படத்தில் தனுஷ், மெஹ்ரீன் பிர்ஸாடா, நவீன் சந்திரா மற்றும் சினேகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவை கையாள, இந்த படத்திற்கு விவேக் – மெர்வின் இரட்டையர்கள் இசையமைக்கிறார்கள். திலீப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி), விவேக் (பாடல்கள்), ஜானி (நடனம்), அனுவர்தன் – தாத்ஷா ஏ பிள்ளை (ஆடைகள்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள்.












