
நாடு எங்கேயோ போயிட்டிருக்கு.
நாம்ப நிலாவுக்கு ராக்கெட்டை அனுப்பியிருக்கோம். அதுவும் ஒரு தமிழன் தலைமையில.
அணுகுண்டு சோதனை நடத்தி பொக்ரானை அடையாளம் காட்டியது ராமேஸ்வரத்து தமிழன்தான்.
இப்படி முன்னேற்றப்பாதையில் போயிட்டிருக்கிறோம்.
இப்படிப்பட்ட நிலைமையில சாதிச்சண்டை அவசியமா?
நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய உறவுக்கார அம்மா மதுவந்தி….அதாவது ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் ,கணவனை விட்டுப் பிரிந்து விவாகரத்து வாங்கிக் கொண்டு வாழ்கிற மகராசி.
“நான் உயர் சாதியை சேர்ந்தவள் என்பதில் பெருமை அடைகிறேன். நீங்களும் உங்கள் ஜாதியைச் சொல்லி பெருமை அடையுங்கள்” என்பதாக சொல்லிஇருக்கிறாராம்.
“நாய்ல உயர்ந்த சாதி இருக்கு. பூவுல உயர்ந்த சாதி இருக்கு, காய்ல உயர்ந்த சாதி இருக்கு.மனுசன்ல உயர்ந்த சாதி இருக்ககூடாதா” என இன்னொரு மனிதர் கேட்டிருக்கிறார்.
இது போதாதா?
பெரியார் படம் எடுத்த இயக்குநர் வேலு.பிரபாகரனுக்கு.! வயதான காலத்திலேயும் இளம் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டவர்.
அவரும் ஒரு வீடியோ விட்டிருக்கிறார்.
அதன் சுருக்கம் இங்கே!
“ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி ஒரு வீடியோ விட்டிருக்காங்க. அதில தன்னை உயர்ந்த ஜாதியை சேர்ந்தவள்னு சொல்லிக்கிறதில பெருமை அடையிறேன். இது மாதிரி நீங்களும் உங்க சாதியைச் சொல்லி பெருமைப் பட்டுக்குங்க ,அதாவது நாங்க தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவங்கன்னு சொல்லி பெருமப்பட்டுக்கனுமாம்.
இந்த நவீன உலகத்தில வேற எங்கும் இல்லாத சாதியை இங்கு மட்டும் திணிக்கணுமா.?
கடவுளை மறுக்கத் துணிந்தால் சாத்திய நம்மால் மறுக்க முடியும்.
நாம்ப தாழ்ந்த சாதிதான்னு ஒத்துக்கணும். இல்லேன்னா இந்த நவீன காலத்தில இதெல்லாம் சரியில்லேன்னு புரட்சி செய்யணும்.இந்த இரண்டில ஒண்ணுதான் தீர்வாக இருக்க முடியும் “என்கிறார் வேலு பிரபாகரன்.












