
தெலங்கானாவின் புதிய ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இதற்கு முன்னர் பல தமிழர்கள் பிற மாநிலங்களில் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தமிழிசை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்தபோதே இந்த நியமனம் நடந்திருக்கிறது,
இதைப்பற்றித்தான் தெலங்கானா முதல்வரின் பத்திரிக்கை செயலாளர் நரசிம்மராவ் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
முதல்வரின் ஒப்புதல் இன்றி அந்த கட்டுரையை எழுதி பத்திரிகையில் வெளியிட்டிருக்க முடியாது.
ஆளுநர் நியமன வித்தை என்பதாகவே அவர் சொல்கிறார்.
அவர் சுட்டிக்காட்டியிருப்பது என்ன?
“அன்றுவரை அரசியல் தொடர்பில் இருக்கிற ஒருவரை ஆளுநராக நியமனம் செய்யக்கூடாது. ஆளுநர் நியமனம் தொடர்பாக அந்தந்த மாநில முதல்வரை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்கிறது சர்க்காரியா கமிஷன்.”
ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என குற்றம் சாட்டியிருக்கிறார்.
அதுவும் உண்மைதானே!
கவர்னர் பதவி அறிவிப்புக்குப் பின்னர்தானே கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை!












