
உலகநாயகன் கமல்ஹாசனின் திரை உலகில் எக்ஸ்பீரியன்ஸ் 60 ஆண்டு காலம்.
அதாவது சஷ்டியப்த பூர்த்தி கொண்டாட வேண்டிய வயது.
இதுவரை திரையுலக வரலாற்றில் எந்த நடிகரும் இத்தனை வருடங்கள் சினிமாவில் இருந்ததாக சரித்திரம் இல்லை.
உலகநாயகனுக்கு மட்டுமே உலகளாவிய அந்த பெருமை உண்டு.
தமிழ்த் திரை உலகை சார்ந்த எந்த சங்கமும் இந்த விழாவை முன்னெடுத்து நடத்த முன் வரவில்லை. இரு பெரிய சங்கங்கள் அரசியல் காரணமாக ஆளும் கட்சியினரால் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு அமைப்பு நடத்தினால் அதற்கு எதிரான கருத்துள்ள இன்னொரு அமைப்பினை சேர்ந்தவர்கள் விழாவை தவிர்க்கப்பார்ப்பார்கள் என்கிற காரணமும் இருக்கிறது..
அதனால் ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனமே கமலுக்கான விழாவை முன்னின்று நடத்துகிறது. கமலின் பிறந்த நாளன்று அவரது பிறந்த ஊரான பரமக்குடியில் தந்தை சீனிவாசனுக்கு சிலை திறக்கிறார்.
அதாவது நாளை 7 ஆம் தேதி. அதற்கு மறுநாள் சென்னை சத்தியத்தில் ஹே ராம் படம் திரையிடப்படுகிறது பிரமுகர்களை சந்தித்துப் பேசுகிறார்,
17 ஆம் தேதிதான் நேரு உள் விளையாட்டரங்கில் பெரிய அளவில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சியும் பாராட்டு விழாவும் நடக்க இருக்கிறது.
இந்த விழாவில் ரஜினிகாந்த்,அஜித்குமார்,விஜய் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்கள் கலந்து கொண்டாலும் அஜித்,விஜய் ரசிகர்கள் மோதிக்கொள்ளாமல் கண்ணியம் காப்பார்களா ?
ஒருவர் பேசும் போது இன்னொருவரின் ரசிகர்கள் இடையூறு செய்யாமல் இருப்பார்களா என்பது சந்தேகம். ஆனால் ஒரு மாபெரும் கலைஞனுக்கு நடக்கும் விழாவில் இருவரும் கலந்து கொள்வது தமிழ்த் திரை உலகுக்கு பெருமை சேர்ப்பதாகும் .அஜித்,விஜய் இருவர்க்கும் கலந்து கொள்ள வேண்டிய கடமை இருக்கிறது.












