
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது பா.ஜ.க.வை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி சென்னைக்கு வந்தால் அவ்வளவாக வாய் நீளம் காட்டமாட்டார். ஒரு தடவை வாயை திறந்து வம்பு இழுத்ததற்காக அதிமுகவை சேர்ந்த பெண்களிடம் அவர் பட்டபாடு….!
நாடே சிரித்தது. உயர்நீதி மன்றம் சென்ற அவருக்கு வித்தியாசமான வரவேற்பு…!
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எதிராக வாயைத் திறந்திருக்கிறார்.
திருப்பதி ஏழுமலையானை தரிசித்தோமா,லட்டு வாங்கினோமா என்றில்லாமல் வம்புக்கு வரவேற்பு கொடுத்திருக்கிறார்.
“எதிர்வரும் காலத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்து ரஜினி அரசியல் செய்தால் அந்தக் கட்சி குட்டிச்சுவராகத்தான் போகும்” என கருத்து சொல்லியிருக்கிறார்.
இது கருத்தா,சாபமா என்பது அந்த அரசியல் ஞானியிடம்தான் கேட்கவேண்டும்.












