சூர்யா-திரிஷா நடிப்பில்,ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம், ‘கருப்பு’. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா பேசுகையில்,”2 வருஷத்திற்கு முன்பு 30 முதல் 45 நிமிடங்களுக்குள் முடிவு பண்ண படம் இது. முழுக்க முழுக்க ஆர்.ஜே.பாலாஜியோட விஷன். அவர் இந்த கதையை சொல்லும்போதே தியேட்டர்ல வேற மாதிரி இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. நம்பிக்கை வைத்து தான் எல்லா படங்களையும் பண்றோம்..படம் குறித்து முடிவு பண்ண முதல் நாளில் இருந்தே எல்லாமே சரியாப்போச்சு. அதற்கு முழு காரணம் டிரீம் வாரியர்ஸ் பிரகாஷ், பிரபு.தான்.
நான் இந்த படத்தின் மீதான எல்லா முடிவுகளையும் சரியா எடுத்ததுக்கும், சரியா எடுக்க வச்ச கருப்பசாமிக்கு தான் நாங்க நன்றியை சொல்லணும். ஆசைப்பட்ட, ஆனால் எதிர்பார்க்காத ஒரு வெற்றியை தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த மாதிரியான ஒரு ரியாக் ஷனை சமீபத்தில் தியேட்டரில் நான் பார்த்தது இல்லை.
இந்த படத்திற்கு பெரிய அன்பு கிடைத்துள்ளது. தமிழகம் மட்டுமல்ல கேரளா, ஆந்திரா அயர்லாந்து, நியூசிலாந்து என வெளிநாடுகளிலும் அதே ரியாக்ஷன் கிடைக்கும்போது ஒரு நல்ல படத்துல இருக்கோம் என தோணுது. இப்படி, அப்படி இருந்திருக்கலாம் என எல்லா படத்துக்கும் ஒரு விமர்சனம் இருக்கும். ஆனால் இந்த படத்திற்கு ஒரே மாதிரியான அன்பை சம்பாதித்து இருக்கும்போது அதற்காக நன்றி சொல்லியாகணும்.
படத்தை தாண்டி கருப்பசாமிக்கு ஒரு பாட்டு வைங்க என என் உடன் இருக்கும் குமார் சொன்னார். அவர் சொன்ன ஐடியா தான் கிளைமாக்ஸ் பாடல். படம் எடிட் பண்ணி முடிச்சு ஐந்து மாதத்திற்கு பிறகு எடுத்தது தான் கருப்பு பாடல்.
இந்த படத்துக்கு சரியா என்னென்ன பண்ணணுமோ அது எல்லாத்தையுமே பண்ணிடலாம் அப்படின்னு அத்தனை பேரும் சேர்ந்து நினைச்சது வந்து, இன்னைக்கு இந்த சந்தோஷத்தை பார்க்க முடியுது. அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான் உண்மையான சந்தோஷம்”.இவ்வாறு அவர் பேசினார்












