
தரமான கருத்துக்கள் கொண்ட படங்களை, ரசிகர்களை கவரும் வகையில் வெற்றிப்படங்களாக தருகிறவர்கள் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தினர். டாக்டர் . ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ள புதிய திரைப்படம் “சீறு”.
நடிகர் ஜீவா நாயகனாக நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் ரத்ன சிவா எழுதி, இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜீவா ஜோடியாக நடிகை ரியா சுமன் நடித்துள்ளார். நவ்தீப் வில்லன் வேடத்தில் நடிக்க, வருண் மற்றும் காயத்ரி கிருஷ்ணா, சாந்தினி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இச்சந்திப்பில் நிர்வாக தயாரிப்பாளர் அஷ்வின் பேசுகையில் “கடந்த வருடம் எங்கள் நிறுவனம் சார்பில் “எல்.கே.ஜி” படத்தை பிப்ரவரியில் தான் ரிலீஸ் செய்தோம். இந்த வருடம் “சீறு”படத்துடன் ஆரம்பித்துள்ளோம். தரமான ஆக்ஷன் கலந்த, கமர்ஷியல் படமாக எடுத்திருக்கிறோம். இந்தப்படத்தின் பெரும் பலம் ஜீவா தான் அருமையாக நடித்துள்ளார். இயக்குநர் கலக்கலான கமர்ஷியல் படமாக இயக்கியுள்ளார். இந்த வருடமும் தொடர்ந்து நல்ல படங்கள் தருவோம். “என்றார் .
நடிகர் வருண் பேசுகையில் “இந்தப்படத்தில் மல்லி எனும் கதாப்பாத்திரம் செய்துள்ளேன். இயக்குநர் சொன்ன மாதிரி வெயிட் போட்டு உடலை மாற்றி நடித்துள்ளேன். ஜீவாவுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. மல்லி பாத்திரம் கண்டிப்பாக உங்கள் மனதில் இடம் பிடிக்கும் “என்று தனது கேரக்டரைப் பற்றி சொன்னார்.
இசையமைப்பாளர் டி . இமான் தனது இசையில் இந்த படத்தில் அறிமுகமாகி இருக்கிற பார்வையற்ற இளைஞரை அறிமுகப்படுத்தி பேசினார் .
“வேல்ஸ் ஃபிலிம்ஸ்ல் வேலை செய்வது என் வீட்டில் வேலை செய்வது போன்று இருக்கும். வருண் இந்தப்படத்தில் வேறு மாதிரி ஆளாக மாறியுள்ளார் அவருக்கு வாழ்த்துகள்.இயக்குநர் ரத்னா சிவாவுடன் முந்தைய படத்தில் வேலை செய்த பாடல்கள் இப்போதும் பலரது விருப்ப பாடல்களாக உள்ளது. நிறைய சுதந்திரம் தருவார்.. திரைக்கதையில் பாடலுக்கான இடம் தருபவர். இந்தப்படத்தின் பாடல்களும் அனைவருக்கும் பிடிக்கும். மிக சுதந்திரமாக இந்தப்படத்தில் வேலை பார்த்தேன் . நொச்சிபட்டி திருமூர்த்தியை இந்தப்படத்தில் பாடவைத்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. ராஜகணபதி என்பவர் அருமையாக பாடியுள்ளார். இந்த மாதிரி பாடகர்களை அறிமுகப்படுத்துவது தான் மனதிற்கு மிக மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது. எல்லோருக்கும் வாழ்த்துகள் நன்றி.”என்று இமான் பேசினார்.
இயக்குநர் ரத்ன சிவா பேசியது….
“இது மூன்றாவது படம். முதலில் அஷ்வினுடன் கதை சொன்ன போது எந்த ஹீரோவை வைத்து செய்யலாம் என பேசினோம். ஒரு ஆக்ஷன் ஹீரோ வேண்டும் என்று ஜீவாவிடம் போனேன். கதை கேட்டவுடன் நாம் பண்ணலாம் என்று சொன்னார். ஐசரி கணேஷ் சாரிடம் கதை சொல்ல பயமாக இருந்தது. ஆனால் அவர் கதை கேட்டு இது ஹிட்டாகும் என்றார். எளிதில் எந்த ஒரு விசயத்தையும் தீர்மானிப்பவராக இருக்கிறார். .
வருண் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக வெறியாக உழைக்க தயாராக இருக்கும் ஆள். இந்த கேரக்டருக்கு நியாயம் செய்ய மொத்தமாக உடலை மாற்றி வந்தார். மிகப்பெரிய நடிகராக வருவார்.”என்றார்.
தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் பேசியது….
“சீறு” எங்கள் நிறுவனத்தின் 4 வது படம். கடந்த வருடம் மூன்று படங்கள் ஹிட்டாக அமைந்தது. இந்தப்படமும் ஹிட்டாக அமையும். ஜீவாவுடன் படம் செய்யலாம் என்று அவரை சந்தித்த போது சொன்னேன். அவர் இயக்குநர் ரத்ன சிவாவை அனுப்பி வைத்தார். எங்கள் நிறுவனத்தில் கதை இலாகா இருக்கிறது. அவர்கள் கதை கேட்டார்கள் அவர்கள் அனைவருக்கும் கதை பிடித்து இருந்தது. அவர் சொன்ன மாதிரியே படத்தை எடுத்து தந்துள்ளார். ஜீவா கடுமையாக உழைத்து நடித்துள்ளார். வருண் இந்தப்படத்தில் தன்னை மாற்றி நடித்துள்ளார்.அவருக்கு வாழ்த்துகள். நல்ல தரமான படங்களை தர வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள். நாங்களே இந்தப்படத்தை ரிலீஸ் செய்கிறோம். இந்தப்படம் கண்டிப்பாக தரமான படமாக இருக்கும். எல்லாம் கலந்த கமர்ஷியல் படமாக இந்தபடம் உள்ளது. எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.”என்றார் .
நடிகர் ஜீவா பேசியது ….
“ரொம்ப சந்தோஷமாக இருக்கு. படத்தை எடுப்பதை விட அதை கொண்டு சேர்ப்பது இன்றைய காலகட்டத்தில் பெரிய வேலை.. இந்தப்படத்தில் கேபிள் டீவி ஆப்ரேட்டராக, துள்ளலான இளைஞனாக நடித்திருக்கிறேன். திரைக்கதை அட்டகாசமாக இருக்கிறது. இயக்குநருக்கு பயங்கரமாக கதை சொல்லும் திறமை இருக்கிறது. அவர் யாரிடம் வேண்டுமானாலும் கதை சொல்லி ஓகே வாங்கி விடுவார். அவ்வளவு திறமையானவர். இந்தப்படம் ஒரு பக்காவான கமர்ஷியல் படம். எல்லாவிததத்திலும் அனைவரையும் சந்தோஷப்படுத்தும் படமாக இருக்கும். . வருண் நடித்த ரோலில் முதலில் நானே அவரை வேண்டாம் என்று சொன்னேன். கரடு முரடான கேரக்டர் ஆனால் கடுமையாக உழைத்து அசத்திவிட்டார்”என்று பாராட்டினார்.












