
சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் படம் தங்களுக்கு நட்டத்தை ஏற்படுத்திவிட்டதாக சொல்லி விநியோகஸ்தர்கள் பலர் சென்னைக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள்.
அந்த படத்தை இயக்கிய ஏஆர் முருகதாஸ் ,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் வீடுகளுக்கு சென்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.லைகா நிறுவனத்துக்கு 60 கோடி நட்டமேற்படுத்தியதாக அவர்களது தரப்பினர் சொல்லி விட்டதால் விநியோகஸ்தர்களின் பார்வை ரஜினி,முருகதாஸ் பக்கமாக திரும்பியது. ஆனாலும் அவர்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. விநியோகஸ்தர்களின் புலம்பல் சுவரொட்டிகளாக சென்னை சுவர்களை அலங்கரித்தனர்.
முருகதாஸின் அலுவலகத்திலும் வீட்டிலும் சிலர் அத்துமீறி நுழைந்து மிரட்டியதாக அவர் இயக்குநர் சங்கத்தில் புகார் செய்திருக்கிறார். சுவரொட்டிகள் தன்னுடைய இமேஜை சரித்து விட்டதாகவும் முருகதாஸ் வருத்தப்பட்டிருக்கிறார்.தனிப்பட்ட தாக்குதலாக இருப்பதாக மிகவும் கவலை அடைந்திருக்கிறார். 
திரைப்படங்களுக்கு இது போதாத காலம் என்று சொல்லுமளவுக்கு சரியாக ஓடுவதில்லை.நாலைந்து நாட்கள் ஓடினால் வெற்றி என்று சொல்லுமளவுக்கு வெற்றியின் காலம் சுருங்கி இருக்கிறது. மேலும் பல பல பிரச்னைகள் தலை தூக்காமலேயே அமுங்கியே இருக்கின்றன. அவை எப்போது பூதாகரமாக எழும் என்பது தெரியவில்லை.
அரசு அனுமதி பெற்று நெய்வேலியில் படப்பிடிப்பு நடத்தினாலும் தளபதி விஜய் நடிக்கிற படம் என்பதால் பா.ஜ.க.வினர் சிலர் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப் பட்டதாக பெப்சி சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வமணி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.












