
சயீப் அலிகான் இந்தியா முழுமையும் நன்கு அறியப்பட்ட முன்னணி நடிகர். கரீனா கபூரின் காதல் கணவர்.
இவருக்கும் முதல் மனைவிக்கும் பிறந்தவர் சாரா அலிகான்.
பாலிவுட்டில் பரபரப்பு நடிகை.
இவருக்கும் கார்த்திக் ஆர்யன் என்கிற முன்னணி நடிகருக்கும் நெருக்கம் அதிகம். இருவரும் ஒன்றாக சுற்றுகிறார்கள்.அடிக்கடி அவர்களை ரெஸ்டாரண்டுகளில் இரவு நேரத்தில் பார்க்க முடிகிறது.டேட்டிங் செல்கிறார்கள் என்பது செய்தி.
இருவரும் இணைந்து நடித்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
கார்த்திக் ஆர்யனிடம் காதலைப் பற்றி செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் :
“காதல் என்பது அற்புதமானது. உணர்வு..உணர்ச்சி இப்படி சொல்லிக்கொண்டாலும் அதற்கு சரியான வியாக்கம் சொல்லிவிட முடியாது.
நான் யாரையாவது லவ் பண்ணினால் ….இதற்குத்தானே அப்படி கேட்டிருக்கிறீர்கள். நான் லவ் பண்ணினால் எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருப்பேன். எவ்வித தயக்கமும் இல்லாமல் என் காதலுக்குரியவளுக்காக எதையும் செய்வேன்” என்கிறார் .












