
அனுஷ்காவுக்கும் பிரபாஸுக்கும் காதல்.! கல்யாணம் கட்டிக் கொள்ளப் போகிறார்கள். பாகுபலி ஜோடி உண்மையான ஜோடியாக மாறப்போகிறது என்றெல்லாம் பேசப்பட்டது.
எழுதப்பட்டது. அவர்களிடமே கேட்கப்பட்டது. அவர்கள் மறுத்துச் சொன்னாலும் மீடியாக்கள் மாறவில்லை.
‘அவர்களுக்குத்தான் கல்யாணம் நடக்கும்.அதான் இருவரும் ஒன்றாகத் திரிகிறார்கள் ‘ என்று அவர்கள் இருவரும் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு பார் பார் ஜோடியை என்று படம் காட்டியது மீடியா.
அநேகமாக அத்தகைய செய்திகளுக்கு இந்த ஆண்டு முடிவு கட்டப்பட்டு விடும் என்று சொல்லலாம்.
ஆமாம் .அனுஷ்காவுக்கு புது மாப்பிள்ளையை தேடி விட்டார்கள் என்று சொல்கிறார்கள் .
அவர்கள் கை காட்டுகிற புதிய இடம் கிரிக்கெட் மைதானம். கிரிக்கெட் வீரரை அனுஷ்கா காதலிப்பதாகவும் இருவரும் கல்யாணம் கட்டிக்க கொள்ளப்போகிறார்கள் என்றும் புதிதாக ஒரு சேதி அடிபட ஆரம்பித்திருக்கிறது.
இதே நேரத்தில் பிரபாஷின் நெருங்கிய உறவினர் கிருஷ்ணம ராஜு ஒரு மகிழ்ச்சியான செய்தியை சொல்லியிருக்கிறார்.
“பிரபாஷின் புதிய படம் வெளியான பின்னர் எங்கள் வீட்டில் கல்யாண மேளச்சத்தம் கேட்கப்போகிறது. அதற்காகத்தான் நாங்கள் வெகு ஆசையுடன் காத்திருக்கிறோம்.”என்று சொல்லியிருக்கிறார்.
ஆக இருவரைப் பற்றிய செய்திகள் வேறு திசை நோக்கி செல்கிறது.!
நல்லதே நடக்கட்டும்.!












