
நேற்றைய நாள் காதலர் தினம் என்றால் இன்றைய நாள் ?
காதலர்களுக்கு உகந்த நாளாக இராதா?
எவன் சொன்னான் அப்படி ?
“எந்நாளும் எங்களுக்கு காதலர் தினமே “என ஓங்கி அடிக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.!
- “உள்ளம் பறித்தது நான் என்பதும் -என்றன்
- உயிர் பறித்தது நீ என்பதும்
- கிள்ளி உறிஞ்சிடும் மாமலர்த்தேன் -இன்பக்
- கேணியிற் கண்டிட வேணுமென்றாள் .
- துள்ளி எழுந்தனன் சுந்தரன்தான் .- பசுந்
- தோகை பறந்தனள் காதலன் மேல் !”
என்பார் பாவேந்தர் பாரதிதாசன். அத்தகைய காதலர் நாங்கள் என்பது போல காதலர் தினம் பற்றி தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
“ஐந்து ஆண்டுகள் எங்களின் காதலின் வயது. காத்து வாக்கில் எங்களின் அன்பான காதல் எப்படி ஐந்து ஆண்டுகளை கடந்தது ?
தெரியவில்லை.!
உன்னுடைய ( நயன் )அன்பும் பாசமும் நிறைந்த காதலால் நமக்கு தினம் தினம் காதல் தினமே” என பதிவு செய்திருக்கிறார்.
அவர்களின் காதலை வாழ்த்தி ரசிகர்களும் பதிவிட்டிருக்கிறார்கள்.












