
கடந்த பிப்ரவரி 11 ஆம் நாளன்றுதான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சவுந்தர்யா தொழிலதிபர் விசாகனை திருமணம் செய்து கொண்டார்.
ஆரியமும், திராவிடமும் இணைந்த நாள் அது.!
ஓராண்டு கால இல்லற வாழ்க்கை எவ்வித பிணக்கும் இல்லாமல் சுகப்பயணம் செய்தது. அடுத்து சுகப்பிரசவம் ஆகும் நாளை மணமகன் வீட்டார் எதிர்பார்ப்பார்கள் அல்லவா!
அந்த நாள் எந்த நாள்?
தற்போது விசாகனும் சவுந்தர்யாவும் பாரிசில் முதலாண்டு திருமண நாளினை கொண்டாடி விட்டு அப்படியே காதலர் தினத்தையும் கொண்டாடி விட்டார்கள் ஈபிள் டவர் சாட்சியாக ! வாழ்க பல்லாண்டு விசாகன் தம்பதியர்.!












