நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.இதில் ரஜினிகாந்த் உடன் இணைந்து சிம்ரன் மற்றும் ராஷி கன்னா உள்ளிட்ட நடிகைகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தில் ரஜினிகாந்த் ஆக்ஷன் டாக்டராக, கையில் கத்தி வைத்துக் கொண்டு எதிரியை வேட்டையாடும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் தலைப்பு மற்றும் தொடக்க விழா சென்னையில் நடந்தது. இந்நிகழ்வில் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன்,கலைப்புலி.எஸ்.தாணு மற்றும் ‘தர்மன்’ படக்குழுவினர் கலந்து கொண்டனர்
இந்நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,” பேசுவதற்கே தயக்கமாக இருக்கிறது. நான் பேசினாலே பிரச்சினைதான். எனக்கும் பிரச்சனை.. மற்றவர்களுக்கும் பிரச்சனை.. நான் பேசவில்லை என்றால் கிண்டல் செய்கிறார்கள்.. நான் பேசவில்லையெனில் ‘வாயில் கொழுக்கட்டையா இருக்கு.. பேசினால் என்ன/’ என கேட்பார்கள். நான் ஏதாவது பேசினால் ‘இப்போது பேசுவதை முன்னாடியே பேச மாட்டியா?’ என திட்டுவார்கள்.. நம்மை பிடிக்காதவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்காது.. நம்மை பிடித்தவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்கும் என நினைப்பது முட்டாள்தனம்.இந்தப் படத்திற்கு நான்காவது இயக்குனர் அஸ்வத் முதலில் ரவிக்குமார் இயக்குவதாக இருந்தது. பின்னர் சுந்தர் சி. அதன் பிறகு சிபி சக்கரவர்த்தி என மாறி கடைசியாக இப்படத்தை அஸ்வத் இயக்க உள்ளார்.
சிபி சொன்ன கதை பிடித்திருந்தது ஆனால் அது ரொம்ப சென்சிடிவ் சப்ஜெக்ட் அணு விஞ்ஞானி சம்பந்தப்பட்ட படம் . அது கொஞ்சம் டைம் ஆகும் என்பதால் தள்ளி வைத்துவிட்டோம். இந்த கதையை நான் கேட்கல, நீங்களே கேட்டு சொல்லுங்க என கமல் சொன்னார் படத்தில் எல்லா பொறுப்புகளையும் கமல் என்னிடம் கொடுத்துவிட்டார். அதுவே கொஞ்சம் பயமாக தான் இருந்தது. அதனால ‘இந்த கதை எல்லாம் வேண்டாம் கமல், நீங்களும் கதை கேட்டு ஓகே சொல்லுங்க’ என்றேன் . அஸ்வத் மீது மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. அதற்காக அவரை மட்டும் சொல்லவில்லை .
ஒரு கூட்டு முயற்சி. படம் நன்றாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அவரின் ‘டிராகன்’ படம் பிடித்திருந்தது. அதில் நல்ல மெசேஜ் இருந்தது .கமலுடன் ஆன நட்பு பற்றி சொல்லத் தேவையில்லை .1975 களில் கமல் பெரிய ஸ்டார். நான் அந்த சமயம் தான் நடிக்க வந்தேன். ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படம் கமலால தான் பண்ணினேன். அதில் முதலில் நடிகர் ஜெய்கணேஷ் நடிக்க வேண்டியது.
கமல் தான் நான் நடிக்க வேண்டும் என ஸ்ரீதரிடம் பேசி நடிக்க வைத்தார். படத்தில் நான் செய்த மேனரிஸங்களை பாராட்டியவர் கமல். ஆரம்ப காலத்தில் எனக்கு கமல் செய்த உதவிகளையும் ஊக்கத்தையும் சொல்லிக் கொண்டே போகலாம். ‘பேட்ட’ படத்திற்கு பிறகு நடிகை சிம்ரனுடன் மீண்டும் இணைந்து நடிக்கிறேன்’’ இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.












