
வாயுள்ள புள்ள பொழச்சிக்கும் என்று சொல்வார்கள். ஆனால் நடிகர் மன்சூரலிகானுக்கு வாய்தான் எதிரியே.!
ஒரு காலத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதா கடுமையாக அரசியல்வாதிகள் விமர்சிப்பார். அதில் நையாண்டி கலந்த குத்தல் இருக்கும். ஆனாலும் அவர் படங்களில் நடிக்கிறபோது அனைவரையுமே கவர்ந்து விடுவார். எல்லோருமே எம்.ஆர்.ராதா ஆகிவிட முடியாது.
ஆனால் மன்சூரலிகானின் வழி தனி வழி .இவரது வாயினால்தான் கதாநாயகனாக நடிக்க இருந்த கைதி பட வாய்ப்பு பறிபோனது,
கிடைக்கும் அதிரி, புதிரி நகைச்சுவையான வேடங்களில் நடிக்கக்கூடிய நிலை.
சமீப காலமாக போராட்டம், வழக்கு, ஜெயில், தேர்தல் பிரச்சாரம் என்று சென்று கொண்டிருந்த அவர் தற்போது படப்பிடிப்புத் தளம் வீடு என தன் கவனம் முழுதுவதையும் நடிப்பிலே செலுத்தத் துவங்கி இருக்கிறார் என்கிறார்கள். இப்படி இருந்தால்தான் பொழப்பு ஓடும் அழைத்தால் அவரது மானேஜர் தான் போனை எடுக்கிறார்.
நீண்ட முயற்சிக்குப் பிறகு மன்சூர் அலிகானைத் தொடர்பு “ஏன் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்குறீர்கள்?” என்று கேட்டபோது,
“என் மகளுக்குத் திருமண வரன் பார்த்துக்கொண்டிருக்கிறேன். மகளுக்கு நீதிபதி ஆக வேண்டும் என்பது கனவு. அதற்காக அவர் படித்துக் கொண்டிருக்கிறார். படிப்பின் போதே திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
மேலும் இப்போது நிறைய படங்களிலும் நடித்து வருகிறேன். கெளதம் மேனன் இயக்கும் படம், இயக்குநர் சற்குணத்தின் படம், தங்கர் பச்சான் இயக்கும் படம், ரெஜினா கசன்ட்ராவோடு ஒரு படம், விமல், விக்ரம் பிரபு ஆகியோரின் படங்களிலும் நடித்து வருகிறேன். மனிதர்கள் மீதான அன்பும் செய்யும் தொழில் மீதான பற்றும் தான் என்னை இப்போது உற்சாகமாக்கி வருகிறது. சினிமா வாழ்விலும் என் வீட்டிலும் இன்னும் பல நல்ல செய்திகள் வரும்” என்றார்.












