
வெகுகாலமாக வெள்ளித்திரையை விட்டு விலகி இருப்பவர்களில் நடிகர் பரத்தும் ஒருவர்.
சிறந்த கதைக்கான தேடல் ஒரு காரணம். ரீ என்ட்ரி என்பது மக்கள் மனதில் பச்சக் என்று ஒட்டிக்கொள்ளும்வகையில் இருக்க வேண்டும் என்பது மற்றோரு காரணம் என்பதாக நினைத்துக் கொள்ளலாம்.
அனூப் காலித் என்பவர் தயாரித்திருக்கிற படத்தின் பெயர் ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ் ‘
இந்த படத்தில் விவியா சன்த் ,அடில் இப்ராகிம்,பிரமிள் சித்தார்த் ,அனுமோகன் ,தயாரிப்பாளர் அனூப் காலித் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கேள்விப்படாத பெயர்களாக இருக்கிறதா…அறிமுகங்கள்.
கதை என்ன?
திருட்டுத்தொழில் மூலம் பெரிய ஆளாகி வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்று நான்கு பேர் நினைக்கிறார்கள். ஆறு மணி நேரத்தில் ஒரு திருட்டை செய்து முடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது நிறைவேறியதா ,இல்லையா?
இதான் கதை சுருக்கம்.
கடவுளின் தேசத்து ஆட்கள் தயாரிக்கிற இந்த படம் பரத்துக்கு கை கொடுக்குமா?












