
- “மன்னவன் கோபம் கொண்டால்
- கண்ணீர் விட வேண்டும் .
- வஞ்சியர் வஞ்சம் வைத்தால்
- பாதம் தொட வேண்டும்.”
இது கவியரசர் கண்ணதாசன் சொன்ன தத்துவம்.
ஊடல் கொண்ட கணவர் -மனைவிக்கு அவர் சொன்ன மருத்துவம், காதலன் -காதலிக்கும் பொருந்தும்.
இயக்குநர் ஏ.எல்.விஜய் -அமலாபால் இருவரும் காதலித்துத்தான் கல்யாணம் செய்து கொண்டார்கள்.ஊடல் இல்லாத காதலும் இல்லை,கல்யாணமும் இல்லை.
இவர்களது காதல் கல்யாணத்துக்கு ஊடலே உலை வைத்து விட்டது.
வாய்ப்புகளுக்காக கிசுகிசுக்களை உருவாக்குவது நட்சத்திரங்கள்தான். செயற்கை அழகும் ஒப்பனையும் தூக்கலாக இருந்து வெளியிடுகின்ற படங்கள் ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுக்கும்.
மணமுறிவுக்குப் பிறகு ஆடை என்கிற படம் அமலாபாலுக்கு ஒரு பிம்பத்தை தந்தது.
துணிந்த நடிகை. ஆடை இல்லாமல் நடிக்கவும் செய்வார் என்கிற உணர்வு.
இந்த படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சிகளின் போது “தனக்கும் இன்னொருவருக்கும் நட்பு” இருப்பதாக சொன்னார்.
அந்த ‘இன்னொருவர்’பவ்னிந்தர் சிங் ‘!
அவர்கள் இருவரும் லவ் இன் ரிலேஷன் ஷிப்பில் இருந்தபோது எடுத்தபோது எடுத்த படங்களை அவர்களே தங்களின் இன்ஸ்டராகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டனர்.
திடீரென இன்று சில படங்கள். சிங்கும் அமலாவும் பாரம்பரிய உடைகளில் திருமணம் செய்து கொண்டதை போல.!
இருவரும் லிப் லாக் பண்ணிக்கொண்ட படமும் ஒன்று.!
வைரலாக படங்கள் பரவின. சற்று நேரத்தில் பவ்நிந்தர் சிங் தனது இன்ஸ்டராகிராமில் இருந்து எடுத்து விட்டார்.
“கணவர் என்றால் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி?”என்று கேட்டதும் கவியரசர்தான்.!
கல்யாணம் நடந்துச்சா இல்லியா? எதற்காக இந்த நாடகம்.?
கொரானா வைரஸை கொண்டையில் முடித்துக்கொண்டு அமலா பால் நாடகம் போடுவது அழகில்லை.












