
சமூக இடைவெளி என்பது கொரானா தோற்று பரவாமல் இருப்பதற்காக எடுக்கப்பட்ட வழிகளில் ஒன்று.
லாக் டவுன் என்கிற ஊரடங்கு உத்திரவு ஏப்ரல் 15 ஆம் தேதி தளர்த்தப்படுமானால் நிலைமை என்ன ஆகும்?
உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் உள்ள அனைத்து எம்.பி.களுடன் வீடியோ கான்பரன்ஸ் வழியாக பேசி இருக்கிறார்.
“ஊரடங்கு உத்திரவை அரசு திரும்பப்பெறுகிற முடிவுக்கு வந்தால் முன்னைப்போல மக்கள் கூட்டமாக நடமாடாத தொடங்கி விடுவார்கள்,முந்தைய இயல்பு நிலைமை திரும்பி விடும். ஆனால் இத்தகைய கூட்டத்தினால் நாம் இதுநாள்வரை கட்டிக்காத்த நோய் தடுப்பு நடவடிக்கைகள் அர்த்தமற்று போய் விடாதா? மக்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் .அதற்கான ஆலோசனைகளை சொல்லுங்கள் “என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.












