
பிரபல நாளிதழுக்கு மிகவும் வேண்டப்பட்ட சினிமாக்காரர்களில் இயக்குநர் சுசி.கணேசனும் ஒருவர்.இவர் தற்போது மும்பைக்கு ஷிப்ட் ஆகிவிட்டார்.
இவரது படங்களில் பைவ் ஸ்டார், விரும்புகிறேன், திருட்டுப் பயலே, கந்தசாமி, ஆகிய படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.
இவற்றில் திருட்டுப் பயலே 2 வை , இந்தியில் ரீமேக் செய்திருக்கிறார். பாபி சிம்ஹா நடித்த கேரக்டரில் வினீத்குமார் சிங், அமலா பால் கேரக்டரில் ஊர்வசி ராவ்தெலா, பிரசன்னா நடித்த கேரக்டரில் அபிஷேக் ஓபராய் நடித்திருக்கிறார்கள்..
லக்னோ மற்றும் வாரணாசியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இந்தகிய மாதமே வெளியாகி இருக்க வேண்டும். கொரானாவுக்குப் பயந்து ஒதுங்கிவிட்டது.
இயக்குநர் சுசி கணேசன் என்ன சொல்கிறார் ?
,’கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக , அரசு அறிவுறுத்தலின்படி மும்பையில் எனது வீட்டில் இருக்கிறேன். இந்த நேரத்தைநான் மிகவும் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறேன். திருட்டுப் பயலே 2 படத்தின் இந்தி ரீமேக் வேலை முடியும் தருவாயில் இருக்கு.ஊரடங்கு இல்லையென்றால் படவேலைகள் அனைத்தும் முடிந்திருக்கும். எனக்கு கிடைத்த இந்த இடைவெளியை அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகளுக்கு பயன் படுத்தி கொள்கிறேன். அதுவும் இறுதிக்கட்ட நிலையில் உள்ளது.இப்படம்,தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாக்கப்படவுள்ளது.பான் இந்தியா படமாக இருக்கும். பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ என படம் உருவாக இருக்கிறது. ஹீரோ இன்னும் முடிவாகவில்லை. அதற்கான தொடக்க வேலைகளுக்கு இந்த நேரத்தைப் பயன்படுத்தி கொள்கிறேன்” என்கிறார்.
நல்லதே நடக்கட்டும்.












