
ரகுல் பிரீத் சிங். பஞ்சாபி பொண்ணு.அப்பா ராணுவ அதிகாரி.
ஸ்பைடர்.என்.ஜி.கே..தடையறத்தாக்க ,என பல தமிழ்ப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இந்தியன் 2 படத்தில் உலகநாயகனுடன் நடித்து வருகிறார். இந்தி ,தெலுங்கு ,தமிழ் என பல படங்களில் பிசியாக இருந்து வரும் இவர் யாரையாவது லவ் பண்ணுகிறாரா? அல்லது நட்புடன் யாருடனாவது இருக்கிறாரா?
நடிகையென்றால் திரை உலகில் யாருடனாவது நட்பில் இருக்க வேண்டும். காதலிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. நல்லது, கெட்டது எடுத்து சொல்ல நல்ல நண்பன் இருக்க வேண்டுமல்லவா? அப்படி யாராவது இருக்கிறார்களா? முக்கியமான நடிகை ஆயிற்றே!
“நான் சிங்கிள்தான்.!தனி ஆளாகத்தான் இருக்கேன்.ஏன் இப்படி?
அதுக்கு காரணம் என சகோதரன் அமன் .சின்ன வயசிலேர்ந்து இப்ப வரை என்னை ஸ்பை மாதிரி தொடர்ந்து வாரான் .யாரிட்டயாவது பேசிட்டால் உடனே வீட்டிலே போட்டுக் கொடுத்திடுவான். எப்படிங்க மத்தவங்களோடு பேசி பழக முடியும்?அதனால நான் இன்னமும் தனி ஆள்தான்!” என்கிறார் ரகுல் பிரீத் .
அடப்பாவமே!












