
ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் அவரை சாத்து சாத்து என்று சாத்துவதற்கு எப்படியாவது இடம் கிடைக்குமா என்று பலர் காத்திருப்பார்கள். ஒரு ‘உஞ்சவிருத்தி’சமாச்சாரம் வகையாக மாட்டியிருக்கிறது. ரவுண்டு கட்டி அடிக்கிறார்கள் மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசனை.!
கடந்த வாரம் கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகியோர் சமூக வலைத் தளமான இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார்.
திரையுலகம், எம்ஜிஆர், சிவாஜிகணேசன்,பாலசந்தர் பாரதிராஜா,பாலுமகேந்திரா மற்றும் நண்பர்கள்,அரசியல் என பல தகவல்களை பகிர்ந்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசிய ஒரு விஷயம் பூதாகரமாகியிருக்கிறது.
அதாவது, விஜய் சேதுபதி கேட்ட கேள்வி ஒன்றுக்கு, ‘சகலகலா வல்லவன் வழியை நான் பின்பற்ற வில்லையென்றால் என்னால் ராஜ்கமல் பட நிறுவனம் தொடங்கியிருக்க முடியாது.டிக்கெட் போட்டு விற்கிற வியாபாரம் தானே இது.?
தர்மத்துக்கு நான் பாடுற பாட்டு இல்லையே?!
தியாகய்யர் எப்படி ராமனை போற்றி தஞ்சாவூர் வீதிகளில் (உஞ்சவிருத்தி ) பிச்சையெடுத்து பாடிகிட்டு இருந்தாரோ ,அப்படி பட்ட கலை இல்லையே !
.எனக்கு கார் வாங்கனும்,எம்ஜிஆர் ,சிவாஜி மாதிரி ஆகணும்னு தான் ஆசை
.அப்ப ,மக்களை மகிழ்விக்க மாட்டேன்னா அது என்ன வீம்பு.?
அவங்களுக்கு என் கலை புரியலைன்னா அங்க, அவங்களை கொண்டு வரணுமே தவிர,நான் போய் காட்டுக்குள்ள மகரிஷி மாதிரி உட்கார்ந்துக்கிற முடியாது.” என கூறியிருந்தார்.
இந்த வீடியோ வைரலாகவே, தியாகராஜ சுவாமிகள் பிச்சை எடுத்தார் என எப்படி கூறலாம் என கர்நாடக இசைப்பாடகர்கள் பலரும் கமலுக்கு எதிராக களமிறங்கியுள்ளனர்.இதன் பின்னணியில் அரசியல் உள்ளது என்கிறது கமல் தரப்பு!












