

ஒரு பக்கம் கொரானா விரட்டுகிறது. மறுபுறம் மதவெறி துரத்துகிறது. இதுதான் இன்றைய ஒன்றுபட்ட இந்தியாவின் நிலை.
கேரளமாநிலம் கொச்சிக்கு அருகில் ‘மின்னல் முரளி’ படத்துக்காக ஒரு செட் போடப்பட்டது. பழைமையான தோற்றமுடன் போடப்பட்ட அந்த செட் கொரானா ஊரடங்கு காரணமாக பயன்படுத்தாமல் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.
ஆனால் அந்த செட்டை சில விஷமிகள் நாசமாக்கிவிட்டார்கள்.
அவர்கள் ராஷ்ட்ரிய பஜ்ரங் தள அமைப்பினை சேர்ந்தவர்களாம். அவர்களுக்கு ‘இந்த்ராஷ்ட்ரா ஹிந்து பிரிவு தலைவரான ஹரி என்பவர் வாழ்த்து சொல்லி பாராட்டி இருக்கிறார்.
ஆனால் கேரளா முதல்மந்திரி பினராயி விஜயன் “இத்தகைய வன்முறைகளை நாட்டில் அனுமதிக்க முடியாது.சகித்துக்கொள்ளவும் முடியாது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்திருக்கிறார்.போலீசார் நடவடிக்க எடுத்து வருகிறார்கள். படத்தின் இயக்குனர் ஷாஜி என் கருண் “ஒற்றுமையை சிதைக்கும் விதமாக விஷமிகள் வன்முறையில் இறங்குவதை அனுமதிக்கக்கூடாது “என கண்டித்திருக்கிறார்.












