
பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் படமான கருப்பு ராஜா வெள்ளை ராஜா படம் மறுபடியும் ஸ்டார்ட் ஆகப்போகுது என்று ரெண்டு நாளைக்கு முன்னால் தகவல் சொன்னார்கள்.
நடிகர் சங்க கட்டிட நிதிக்காக தொடங்கப்பட்ட அந்த படம் ஆரம்பத்திலேயே நிறுத்தப்பட்டு விட்டது.இந்த படத்தில் விஷால் ,கார்த்தி நடிக்க பிரபு தேவா இயக்குவதாக அறிவிக்கப்பட்டது
படம் தொடக்கத்திலேயே நின்றதற்கு காரணம் நடிகர் சங்க அரசியல் .விஷால் ஒரு அணி,ஐசரி இன்னொரு அணி என்று உருவாக்கிய பிறகு ஒற்றுமை எப்படி இருக்கும் ?
விஷாலை தூக்கி விட்டு அதற்கு பதிலாக பெண் கேரக்டரை உருவாக்கினால் என்ன ,அதில் நயன்தாராவை நடிக்க வைத்தால் என்ன என்று கிளம்பிய யோசனைதான் மறுபடியும் அந்த படத்தை எடுக்கலாம் என்கிற செய்திக்கு காரணம்.
ஆனால் படக்கென்று ஐசரி கணேஷ் “அப்படியெல்லாம் எந்த ஐடியாவும் இல்ல ,தவறான செய்தி”என்று சொல்லியிருக்கிறார்.












