
என்னை சுத்தி எத்தனை பேர் கம்பு சுத்தினாலும் அசராமல் ஈடு கொடுத்து ஆடுவேன்யா என்கிற லெவலில் இருக்கிறார் விஷால்.
நடிகர் சங்க விவகாரத்தில் நீயா நானா பார்த்து விடுவோம் என்று ஐசரி கணேசுடன் மோதல் .தயாரிப்பாளர் சங்கத்தில் ஆளும் கட்சியுடன் குடைச்சல் .எப்பய்யா கல்யாணம் என்று ஆளுக்காள் விசாரணை. மிஷ்கினுடன் கை கலந்ததாகக் கூட பேசுகிறார்கள்.
இப்படி வில்லங்க கோட்டைக்குள் குடியிருந்தாலும் படத்தயாரிப்பு வேலைகளில் ஆள் கிள்ளியாகத் தான் நிற்கிறார்,

இப்போது படத்தின் டீஸர் விரைவில் வெளியாக இருக்கிறது.
விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரிக்கும் படத்தை இயக்குபவர் எம்.எஸ். ஆனந்தன்.இவர்,இயக்குநர் எழிலிடம் உதவியாளராகப் பணிபுரிந்தவர்.
‘சக்ரா ‘ – ஆன்லைன் வர்த்தக மோசடிகள் பற்றிய பின்னணியுள்ள கதையாக உருவாகி வருகிறது. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார்.இவர்களுடன் ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு பாலசுப்பிரமணியெம், படத்தொகுப்பு சமீர் முகமது, கலை எஸ்.கண்ணன், சண்டைக்காட்சி அனல் அரசு, பி .ஆர்.ஓ ஜான்சன்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் நடத்தப்பட்டது.
இப்படம் விஷால் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, அனைவரின் கண்களுக்கும் விருந்தாக அமையும்.












