
காட்மேன் என்கிற வெப் சீரியலின் டீசரே அந்த சீரியலுக்கு குழியைத் தோண்டி புதைத்து விட்டது.
அந்த சீரியல் பற்றிய ஆதரவு -எதிர்ப்பு விவாதம் இன்னும் சூடாக இருந்து வருகிற நிலையில் சத்தமில்லாமல் ஒரு குறும்படம் வெளியாகி இருக்கிறது.
அந்த குறும்படத்தின் பெயர் மோடி அண்ட் எ பீர் !
இரண்டே இரண்டு கேரக்டர்கள்தான்.ஒரு வெள்ளை முயல் ,ஒரு கருப்பு முயல் இரண்டும் ஒன்றை யொன்று காதலுடன் அந்த சின்னஞ்சிறு கூட்டுக்குள் அணைய முற்படுகின்றன. திடீரென ஒரு கை, வெள்ளை முயலை மட்டும் அப்புறப்படுத்துகிறது.இதுதான் குறும்படத்தின் தொடக்க ,அறிமுகக் காட்சி.
புரிந்தவர்கள் புரிந்து கொள்க.புரியாதவர்கள் புரிந்து கொண்டவர்களிடம் கேட்டுக் கொள்க.
கருப்பு நிறத்தவருடன் வெள்ளை நிறத்தவர் கூடிவிடக்கூடாது என்பது பட முடிவில் தெரிகிறது.
இனி கதைக்குள் போகலாம்.
ஒரு பெண்.காவி நிற சுடிதார், சிவப்பு நிறம்.இனத்தை அடையாளப்படுத்துகிறது. அவளது மோடி ஆதரவு நிலையை உறுதி செய்கிறது.
இவளது காதலர் கருப்பு நிறச்சட்டை. அந்த பெண்ணின் இனத்தை சேர்ந்தவர் இல்லை என்பதை அடையாளப்படுத்துகிறது.
காதலனின் கடைசி பீர் அன்றுதான் என்பதால் அந்த மதுச்சாலையில் அமர்ந்திருக்கிறார்கள். பீப் பில் தொடங்கி இன்றைய சமுதாய சண்டை வரை இருவருமே விவாதிக்கிறார்கள். மோடியின் பொருளாதாரம் ,ரிசர்வேஷன் எல்லாமே வருகின்றன.ஆண்ட பரம்பரை பேச்சு வருகிறது.
காதலிக்கு அவனது பேச்சு பிடிக்கவில்லை.வெளியேறுகிறாள்.
முடிகிறது குறும்படம். இன்னொரு பிரச்னை எழுமா?
இந்த படத்தை தயாரித்திருப்பவர் பா.ரஞ்சித் ,












