
“65 வயதுக்கு மேலே ஆகிடுச்சா…பேசாம வீட்டிலேயே குந்திக்கினு இரு. ஆக்டிங் பக்கம் வந்திராதே”ன்னு சட்டம் போட்டா தமிழ் நாட்டில் எத்தனை நடிகர்கள் விசுவாமித்திரர்களாக மாறுவார்கள்?
இப்படியும் சட்டம் வருமா? கொரானா காலத்தில் வந்தாலும் வரும் !
மகாராஷ்டிரா அரசு புதிதாக கொண்டு வந்திருக்கிறது.!
பாலிவுட்டில் பதற்றம்.!
யாராக இருந்தாலும் 65 வயதுக்கு மேல் ஆகிவிட்டால் அவர்களால் உழைக்க முடியாது என்கிறது புதிய சட்டம்.!
அமிதாப் ,அனுபம் கேர் ,நசிருதீன்ஷா ,கபிர் பேடி ,அனில்ஷர்மா ,மணிரத்னம் ,பிரியதர்ஷன் ,உள்ளிட்ட பல பிரபலங்கள் அரசு குறிப்பிடுகிற வயதினைத் தாண்டியவர்கள்தான்.
இந்தியத் திரைப்பட ,தொலைக்காட்சி ,இயக்குநர்கள் அசோசியேசன் தலைவர் அசோக் பண்டிட் அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் “அரசு குறிப்பிட்டுள்ள சட்டப்பிரிவு நடைமுறைக்கு ஒவ்வாதது. பல லெஜண்ட்ஸ் இன்னமும் ஆக்டிவாக இருக்கிறார்கள் “என சொல்லி அவர்களது பெயர்களை குறிப்பிட்டிருக்கிறார்.
இது பற்றி அமிதாப் கருத்து எதுவும் சொல்லவில்லை.












