
போகிறபோக்கினைப் பார்த்தால் படப்பிடிப்புத் தொடங்கினாலும் நடிகர்கள் நடிப்பதற்கு வருவார்களா என்பது சந்தேகமாக இருக்கிறது.
நாகிரெட்டி குடும்பத்தைச்சேந்த சரத் ரெட்டி ,பின்னணிப் பாடகர் ஏ.எல் ராகவன் அண்மையில் கொரானாவுக்கு பலியானார்கள். நடிகை எம்.என்.ராஜம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக தகவல் வந்திருக்கிறது. கோடம்பாக்கத்தை சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது கொரானா .
அமைச்சர்கள், உதவியாளர்கள் என அவர்களையும் விட்டு வைக்கவில்லை.
நடிகர்கள்,அவர்களது குடும்பத்தைச்சார்ந்தோர் இயக்குநர் சிலரும் பாதிக்கப்பட்டிருப்பதாக உறுதி செய்யப்படாத செய்திகள் வருகின்றன. சினிமாக்காரர்கள் என்றால் சில ஊடகத்தினர் சும்மாவே கொளுத்திப்போடுவார்கள்.












