
மூணே நாளில் போயிடும்னார் அப்புறம் கொரானா பணக்கார நோயின்னார் .இப்ப “கொரானா எப்ப போகும்கிறது ஆண்டவனுக்குத்தான் தெரியும்னு ரஜினிகாந்த மாதிரி ஆகாசத்த கையக் காட்டுறார் நம்ம முதல்வர் ஐயா.!
எலி அழுதா பூனை விட்ருமா என்கிற கதையாகிப்போச்சு மக்கள் நிலைமை. சாமிகிட்ட வேண்டிக்கலாம்னா கோவிலையும் பூட்டியாச்சு. சாமியே ஜெயிலுக்குள் இருக்கிறபோது முச்சந்தி பிள்ளையார்தான் துணை .!
இப்ப கோலிவுட் பிரபலங்கள் வீட்டுக்கு கொரானா விஜயம் நடக்குது. பல புண்ணியவான்களை கொண்டு போயிருச்சு. ரேடியோ ஜாக்கியாக இருந்து கிரிக்கெட் வர்ணனையாளராக மாறி அப்படியே படிப்படியாக நடிகர் ,டைரக்டர்னு உயர்ந்த நல்ல மனுசன் பாலாஜி பட்டுராஜ். இப்ப நயன்தாராவை வச்சு மூக்குத்தியம்மன் சினிமாவ டைரக்ட் பண்றார்.
அவருடைய அம்மாவுக்கு கொரானா. பாவம் மனுஷன் ஒடிஞ்சு போயிருக்கிறார். தன்னுடைய இந்த பேச்சுத்திறமைக்கு அம்மாதான் காரணம்னு சொல்வார். தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்..குணம் பெறுவார்.












