
வருண்மணியனுடனான கல்யாணம் எதனால் நின்றது?
நேற்று வரை யாருமே சொல்லவில்லை.
திரைத்துறையைச்சார்ந்த தொழிலதிபர் வருண்மணியனை விரும்பித்தான் கல்யாணம் செய்து கொள்ள முன்வந்தார். பிராமண சம்பிரதாயப்படி நிச்சயதார்த்தமும் நடந்தது .கல்யாண தேதியும் குறிப்பிட்டார்கள்.
ஆனால் மணவிழா ஒப்பந்தம் முறிந்து விட்டதாக அறிவிப்பு மட்டுமே வந்தது. மணமக்கள் சார்பில் எவரும் காரணம் சொல்லவில்லை.
இந்த சம்பவம் எவரையும் பெரிதாக பாதிக்கவில்லை.
தற்போதுதான் மணவிழா முறிவுக்கான காரணத்தை திரிஷா சொல்லியிருக்கிறார்.
“திருமணத்துக்கு முன்னதாகவே நடிப்பதை நிறுத்திவிடவேண்டும் என்று வருண் மணியன் சொன்னதால் அந்த கல்யாணம் நடக்கவில்லை.என்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை வயசுக்கேற்ற வேடங்களில் நடித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லிவிட்டேன்” என்கிறார் திரிஷா.












