
கணவரின் பிறந்த நாளுக்கு இப்படியொரு மகிழ்ச்சியான பரிசினை மனைவி ராதிகா சரத்குமார் வழங்குவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.
சரத்குமார் தனது 66வது பிறந்த நாளை மிகவும் எளிமையாக குடும்பத்தினருடன் கொண்டாடினார். அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வந்தனர்.
பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
யாரும் எதிர்பாராத வகையில் ஒரு போஸ்டரையும் வெளியிட்டிருந்தார் .
சரத்குமார் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துவரும் “பேர்ட்ஸ் ஆஃப் பிரே” என்ற படத்தின் போஸ்டர்தன அது.
இந்த படம் ‘ஓடிடி’ தளத்தில் வெளியாக உள்ளது என மகிழ்ச்சியான செய்தியை அதிரடியாக பகிர்ந்துள்ளார்.
கோட்டு சூட்டுடன் அடர்ந்த நீளமான தாடி மற்றும் முறுக்கு மீசை என பார்க்கவே படு மாஸாக இருக்கும் “பேர்ட்ஸ் ஆப் பிரே” த்ரில்லர் படம் சரத்குமார் நடிப்பில் ஓடிடியில் வெளியாகும் முதல் திரைப்படமாகும்.கிரைம் திரில்லர் .கையில் கியூப் .அலுவலக மேஜை என காட்சி அமைப்பே வித்தியாசமாக இருக்கிறது .
இந்த “பேர்ட்ஸ் ஆப் பிரே” கதை எழுத்தாளர் அர்ச்சனா சரத் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் உருவாக இருக்கிறது.
இந்த “பேர்ட்ஸ் ஆப் பிரே” படத்தின் படப்பிடிப்புக்கள் விரைவில் துவங்கயிருக்கிறது. மிரட்டலான தோற்றத்தில் சரத்குமாரின் இந்த லுக் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.












