
ரிட்டயர்டு ஆனால்தான் சிலர் அவர்களின் பதவி காலத்தில் நடந்த தப்புகளை மனம் விட்டு சொல்வார்கள். அதைப்போலத்தான் சில நடிக,நடிகையரும்!
ரவீணா டாண்டன் .90 களில் அதிகம் பேசப்பட்டவர்
அவரது காலத்தில் பாலிவுட் எப்படி இருந்தது?
“நடிகர்கள் ,இவர்களது கேர்ள் பிரண்ட்ஸ் ,அவர்களுக்கு ஜால்ரா போடுகிற பத்திரிகையாளர்கள் ,இவர்களை ஒரு கூட்டம் பயன்படுத்தியது. குறிப்பாக பெண் நிருபர்கள் இன்னொரு பெண்ணுக்கு செய்கிற காரியமா என்று அதிர்ந்து போயிருக்கிறேன்.”என்று தொடங்கிய அவர் தொடர்ந்து பரபரப்பினை பற்ற வைத்தார்.
“அவர்கள் எல்லாம் இப்போது தங்களை பெண்ணியவாதிகள் என்று எழுதிக்கொள்வதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.( யாரை சொல்கிறார்? ) அவர்கள் என்னை ஆதரித்து எழுதுவதே கிடையாது. அதற்கு காரணம் அடுத்த அட்டைக்கு கவர்பேஜ் ஸ்டோரி அந்த ஹீரோக்கள்தான் தருவார்கள்.
நான் ஒரு போதும் வாய்ப்புகளை இழந்தது இல்லை. காரணம் நான் கவுரவமானவள்.ஆனால் என்னைப்பற்றி தரக்குறைவாக எழுதினார்கள்.நான் யார் முதுகிலும் சவாரி செய்ததில்லை. கழுத்தறுப்பு வேலைகளை செய்ததில்லை.
எனக்கு காட் பாதர்ஸ் இல்லை.எந்த முகாமிலும் இருக்கவில்லை .எந்த ஹீரோவும் எனக்காக வாய்ப்பு கேட்டதில்லை. பட வாய்ப்புக்காக எந்த ஹீரோவுடனும் படுக்கையை பகிர்ந்து கொண்டது இல்லை. அவர்களுடைய தொடர்பிலும் இருக்கவில்லை. அவர்களுக்கு ஏதுவாக ஆட்டம் போட்டது கிடையாது. பெண் பத்திரிகையாளர்கள் என்னை வீழ்த்த நினைத்ததுதான் ஆச்சரியம்” என்றார் .(பாலிவுட்டில் பிரபலமான பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இருந்து.)












