
பரியேறும்பெருமாள், குண்டு ஆகிய படங்களைத் தொடர்ந்து, இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் அடுத்தடுத்து படங்களை தயாரித்து வருகிறது.
இப்படநிறு வனம், யாழி பிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன் தயாரித்துள்ள ‘குதிரைவால்’ என்கிற படத்தை வெளியிடுகிறது. இப்படத்தில், நடிகர் கலையரசன் கதாநாயகனாகவும், அஞ்சலிப்பாட்டில்கதாநாயகியாகவு ம் நடித்துள்ளனர்.
ராஜேஷ் கதை, திரைக்கதை எழுதியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் – ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியுள்ளனர்.
இப்படம் குறித்து அவர்கள்என்ன சொல்கிறார்கள்?
“குதிரைவால் படம் ரெகுலரான சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக வந்திருக்கிறது.உளவியல், ஆழ் மன கற்பனைகள் , மற்றும் டைம் டிராவல் குறித்த ஒரு அறிவியல் புனைவுப்படமாகவும், வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டதாகவும் , மேஜிக்கல் ரியாலிச சினிமாவாக இந்தபடம் இருக்கும்.தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் இது ஒரு புதிய முயற்சியாக ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் விதமாகவும் இப்படத்தை உருவாக்கியுள்ளோம்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் முறையில்உருவாக்கப்பட்டிருக்கி றது.இது போன்ற படங்கள் தமிழில் மிகக்குறைவு .கலையரசன் மற்றும் அஞ்சலிபாட்டில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். விரைவில் இப் படம் வெளியாக இருக்கிறது.என்கிறார்கள்.
இப் படத்தின் ஒளிப்பதிவை, கார்த்திக் முத்துக்குமார் கவனிக்க,பிரதீப் & மார்டின் விசர் ஆகியோர் இசையமைத்து வருகின்றனர்.












